middle ad

சிம்சோனை கொன்றது யார்?

சாலமோன்
எலியா
ராபர்ட்
கில்பர்ட்
பெமிலிட்டன்
டேவிட்
சந்தியா
ரவிக்குமார்
சிகாமணி

*சிம்சோனை கொன்றது யார்?*
பெலிஸ்தியர்களா, தெலிலாளா? சாத்தானா?
இந்த மூன்று பேருடைய பெயரை நீங்கள் சொன்னால் அது தவறு.
10,000 பெரிய வீரர்கள் சேர்ந்து வந்தாலும் சிம்சோனை ஒருவராலும் ஒன்றும் செய்துவிட முடியாது. ஏன் தெரியுமா சிம்சோனின் பெலம் இவ்வுலகத்திற்கு உரியது அல்ல அது தெய்வீக வல்லமையால் வந்தது. தேவனை யாராலும் தோற்கடிக்க முடியாத வரை எந்த வலிமையான ராணுவமும் எப்படி போராடினாலும் சிம்சோனை தோற்கடித்திருக்க முடியாது. பெலிஸ்தியருக்கு விரோதமாக சிம்சோன் ஒரு பயங்கரவாதியாக எழும்பினான். வெறும் கையால் சிங்கத்தை ஒரு ஆட்டை கிழிப்பது போல கிழித்துப் போட்டான். ஒரு நகரத்தின் வாயிலை தன் தோளில் தூக்கிக்கொண்டு நாற்பத்து ஆறு மைல் தூரம் சென்றவன். ஆயிரம் பேரை கழுதையின் பச்சை தாடை எலும்பை கொண்டு கொன்றவன். இன்னும் அநேக பராக்கிரமங்கள் புரிந்தவன் அவன்.
அப்படி என்றால் சிம்சோனை கொன்றது யார் ?
சிம்சோனை கொன்றது சிம்சோன் தான். அவனே அவன் சாவுக்கு காரணமானான்.
ஒரு மனிதனுடைய மிகப் பெரிய எதிரி வெளியில் இல்லை அவனுக்குள்ளே தான் இருக்கிறது.
ஒரு தேவ மனிதனை எந்த பெரிய எதிரிகளாலும் ஒன்றும் செய்துவிட முடியாது. தன்னைத் தவிர யாராலும் அவனை அழிக்க முடியாது.
சிம்சோன் தெலிலாளின் மடியில் தன்னை ஒப்படைத்து தன் சொந்த வாயால் தன்
பெலத்தின் ரகசியத்தை தெரிவித்து தனக்கு தானே சாவை வருவித்துக்கொண்டான்.
நீதிமொழிகள் 19:3− *மனுஷருடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்: என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்*.
உங்களைத் தவிர உங்கள் வாழ்க்கையை யாராலும் அழிக்க முடியாது. தேவன் மீதோ பெற்றோர் மீதோ அல்லது அரசாங்கத்தின் மீதோ நீங்கள் குற்றம் சாட்டலாம்.
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் தான் உங்கள் வாழ்க்கையின் சிற்பி, நீங்கள் தான் உங்கள் பெரிய எதிரி என்பதை மறந்து போக வேண்டாம். உங்களுடைய மூதாதையர் எவ்வளவு தவறுகள் புரிந்திருந்தாலும் நீங்கள் இடம் கொடுக்காத வரையில் அவைகள் ஒன்றும் உங்களை செய்துவிடமுடியாது. சாத்தானோ அல்லது மந்திரவாத வல்லமைகளோ உங்களை ஒன்று செய்துவிடமுடியாது. சாத்தானுக்கு தெரியும் உங்களைத் தொடுவது தேவனின் கண்மணியை தொடுவதற்கு சமம் என்று, ஆகவே நீங்களாகவே அழியும்படி அவன் காத்திருப்பானே தவிர உங்களைத் தொட முன் வரமாட்டான்.

மிகப்பெரிய சாம்பியன் கோலியாத்தால் தாவீது காயபடுத்த முடியவில்லை ஆனால் விபசாரம் தாவீதின் குடும்பத்தை அழித்தது.

பார்வோனால் மோசேயை ஒன்றும் செய்ய முடியவில்லை ஆனால் கோபம் மோசேயை கொன்றது.

யூதேயாவிலிருந்து வந்த தேவ மனிதனை யெரோபெயாமால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஆனால் அவனது கீழ்ப்படியாமை அவனை சிங்கத்திற்கு இரையாக மாற்றியது.1 இராஜா 13.

மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் சொந்த வாயால் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.
மில்லியன் கணக்கானவர்கள் பாலியல் நோய்களால் மரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த கைகளால் தங்கள் வீட்டை ,திருமண வாழ்வை அழித்து போடுகிறார்கள். *புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்: புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்*.
நீதிமொழிகள் 14:1

உங்கள் தோல்விக்குரிய காரணங்களை வெளியே தேடாதீர்கள். உள்நோக்கி பாருங்கள். தொடர்ந்து பாவத்துக்கு அடிபணிந்தால் அது உங்களை சரீரப் பிரகாரமானவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் கொன்று விடும்.
ஆதாம் மூலம் பாவ விதை நமக்குள் போடப்பட்டிருக்கிறது. உண்மையான மனந்திரும்புதல் அந்த விதையை கொன்று போடுகிறது.
கோபம், பெருமை, பொறாமை, பேராசை, காமவிகாரம் ஆகியவற்றை நீங்கள் கொன்று போடாவிட்டால் அது உங்களை கொன்றுவிடும்.

புகைப்பிடித்தல் மற்றும் குடிப்பழக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் மரித்துக் கொண்டு இருப்பதை அறிந்தும் அனேகர் அந்த பழக்கத்தை விட்டு விடாமல் தங்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார்கள் .

பாவம் உங்களை கொல்வதற்கு முன்னால் நீங்கள் பாவ விதையை அழித்துப் போடுங்கள்.

உங்களின் மிகப்பெரிய எதிரி ஒரு மனிதன் அல்ல, தீயஆவிகள் அல்ல, சாத்தான் அல்ல உங்களின் மிகப்பெரிய எதிரி உங்கள் பழக்க வழக்கமே. ஆகவே கொல்லும் பழக்கத்தை விட்டுவிட்டு ஆண்டவர் அண்டை வந்து சேருங்கள். கர்த்தர் உங்களை வாழ வைப்பார்.ஆமேன்.

Similar Videos