middle ad

உங்கள் சாபம்ஆசீர்வாதமாக மாறும்.!

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/1996443

உங்கள் சாபம் ஆசீர்வாதமாக மாறும்.!

(உபா.23:5)

💥 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.!

💥 சாபம் என்பது ஒரு கொடிய வல்லமை.! நம்முடைய வாழ்க்கையை சிதைக்கக் கூடிய ஒரு தீய வல்லமை.! இந்த சாபத்தை கண்களினால் காண முடியாது.! ஆனால், இந்த சாபத்தின் கிரியைகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.!

💥 எப்படியென்றால், நமது வாழ்க்கையில் வருகிற தீராத நோய்கள், திரும்ப திரும்ப ஏற்படும் கருச்சிதைவுகள், தீர்க்க முடியாத பிரச்சனைகள், மாறாத தற்கொலை எண்ணங்கள், எதிர்பாராமல் ஏற்படும் அழிவுகள், அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள், மாறாத கடன் பிரச்சனைகள், தீராத மனநிலை பாதிப்புகள் இவைகள் மூலம் நாம் இந்த சாபத்தை அறிந்து கொள்ளலாம்.!

💥 இந்த சாபத்திலிருந்து விடுதலைப் பெறுவதற்காகத் தான் மக்கள் எல்லோரும் பல விதங்களில் முயற்சிப் பண்ணுகிறார்கள்.! கோடி கோடியாக பணத்தை செலவு செய்கிறார்கள்.! புண்ணியம் தேடி கோவில் கோவிலாக நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.! ஆனாலும், இன்னும் விடுதலைப் பெற முடிய வில்லை.!

💥 ஏனென்றால், இந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.! இதை எந்த மனுஷனாலும் தடுத்து நிறுத்த முடிய வில்லை.! எந்த பரிகாரம் செய்தாலும் விடுதலை பெற முடிய வில்லை.!

💥 இப்படிப்பட்ட கொடிதான சாபத்தைத் தொலைப்பது எப்படி? என்று தெரியாமல் ஜனங்கள் எல்லாம் தவித்துக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில், நமது தேவன் மட்டும் நம்மைப் பார்த்து சொல்கிற ஒரு வாக்குறுதி தான் ,
"உன் சாபம் ஆசீர்வாதமாக மாறும்" !

💥 இந்த வார்த்தையை நமது தேவனைத் தவிர வேறு யாரும் சொல்லவுமில்லை.! இதற்கான பரிகாரத்தை இவரைப் போல வேறு யாரும் செய்யவுமில்லை.!!

💥 ஏனென்றால், நமது இயேசு கிறிஸ்து மட்டும் தான் இந்த உலகத்திலேயே மனிதனுடைய சாபத்தை முறியடிக்க 2 பரிகாரங்களைச் செய்திருக்கிறார்.!

📖 இதைக் குறித்து நமது வேதத்தில் தியானிப்போமா?

1. முதல் பரிகாரம்:
இந்த சாபம் முதலாவது ஆதி மனிதனுடையக் கீழ்ப்படியாமையினாலே இந்த உலகத்தில் வந்தது.! அதினால் தான் இந்த பூமியிலே சாபத்தின் அடையாளமாக முள்ளுகள் முளைத்தது. (ஆதி.3:17,18) நமது இயேசு கிறிஸ்து தான் இந்த சாபத்தை முறியடிப்பதற்காக தன் தலையிலே முள்முடியை ஏற்றுக் கொண்டார்.! அகோர வேதனையை அநுபவித்தார்.! இதன் மூலமாகத் தான் சாபங்களை முறித்து விடுதலையை உண்டாக்கினார்.!

2. இரண்டாவது பரிகாரம்:
இரண்டாவதாக மரத்திலே தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்று அக்கால நியாயப் பிரமாணத்தில் சொல்லப்பட்டு இருந்தது. (கலா.3:13) அதினால் தான், நியாயப் பிரமாணத்தின் மூலம் மனிதனுக்கு இருந்த சாபத்தை முறியடிக்கும்படி, இயேசு கிறிஸ்து சாபமான மரத்தில் அறையப் பட்டார். சாபமான மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தார்.! இதன் மூலமாகத் தான் சாபத்தை முறியடித்து, நமக்கு விடுதலையை உண்டாக்கினார்.!

💥 அதனால் தான், இந்த சத்தியத்தை ஏற்றுக் கொண்டு, இயேசுவைத் தேடி வருகிற ஒவ்வொருவரும் இந்த சாபத்திலிருந்து விடுதலையாகி, தேவ ஆசீர்வாதங்களினாலே நிரப்பப் பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.!

💥 நீங்களும் இந்த சத்தியத்தை ஏற்றுக் கொண்டு இந்த இயேசுவை முழு மனதோடு தேடி ஆலயத்திற்கு வருவீர்களானால், இன்றே உங்கள் சாபம் ஆசீர்வாதமாக மாற ஆரம்பிக்கும்.! தொடர்ந்து இயேசுவைத் தேடினால், முழுமையாக விடுதலை அடைந்து ஆசீர்வதிக்கப்படுவோம்.!

 அப்போது தான்,
நமது வாழ்க்கைச் செழிப்படையும்.! நமது தொழில் விருத்தியடையும்.!! நமது தலைமுறை தலைமுறையாக ஆசீர்வாதங்கள் பெருகிக் கொண்டே இருக்கும்.!!!

எனவே இன்றே தீர்மானிப்போம்.! குடும்பமாக இயேசுவைத் தேடுவோம்.! சபையாக ஆராதிப்போம்.!! தலைமுறையாக ஆசீர்வதிக்கப்படுவோம்.!!! ஆமென்.

 தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.! ஆமென்.

Similar Videos