உம்மாலே நான் ஒரு சேனைக்குள்


உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேன்
மதிலை தாண்டிடுவேன் - என்
கர்த்தராலே காரியம் நிச்சயமாய்
வாய்த்திடும் பாடி மகிழ்ந்திடுவேன்

1) காற்று பெருகினாலும்
கடும் அலை மோதினாலும்
யெகோவாயீரே பார்த்துக்கொள்வார்
அச்சமின்றி கலக்கமின்றி
அக்கறை நான் சேர்ந்திடுவேன்
நன்றி பாடல் பாடிடுவேனே

2) பலமும் அல்லவே பராக்கிரமம் அல்லவே
ஆவியானவரால் எல்லாமாகுமே
உலர்ந்த எலும்பும் சேனையாகும்
உள்ளம் உடல் தூய்மையாகும்
ஆவியானவரால் எலலாமாகுமே

3) தொபியா சன்பலாத்
தினம் தினம் எதிர்த்தாலும்
யெகோவா நிசி என்றும் தோற்பதில்லையே
நிந்தை மாறும் விந்தையாகும்
பாவ மாந்தர் மீட்பை காணும்
சாத்தானின் ராஜ்யம் ஜெயிப்பதில்லை