அல்லேலுயா என் ஆத்துமாவே


அல்லேலுயா என் ஆத்துமாவே
கர்த்தரை ஸ்தோத்தரி - நான்
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
கீர்த்தனம் பண்ணுவேன்.

1) சகலமும் படைத்தவர்
சகல அதிகாரம் உடையவர்
சாத்தானை வென்று
சாவினை அழித்தவர்
சர்வ வல்லவர் (2)

2) அற்புதம் செய்பவர் - இந்த
அகில்தை ஆள்பவர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நம்பினோரை காப்பவர் (2)

3) சீக்கிரம் வருபவர் - பரம
சீயோனில் சேர்ப்பவர்
பாவத்தை வெறுத்து பரிசுத்தம் நாடி
பரலோகம் சேருவேன் (2)