அழைத்தவரே நீர் நடத்திடுவீர்

அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
அழைப்பினையே நான் நினைத்திடுவேன்

முன் அறிந்தவரே முன் குறித்தவரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே

1) அழைத்தவர் நீரல்லவே
அனுதினம் நடத்திடுவீர்
உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான்
என் தேவைகள் தினம் பார்த்துக்கொள்வீர்

2) உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் போஜனமய்யா
உம் சத்தம் தினம் கேட்டு
உம் சித்தம் தினம் செய்து
நிகரில்லா ராஜியம் கட்டிடுவேன்

3) பாடுகள் பலவாகினும்
பாரத இரட்சிப்பே என் வாஞ்சையே
சுயம் வெறுத்து, பல பாடு சகித்து
பரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன்