வாழ வைத்தவரே


வாழ  வைத்தவரே
எங்கள் வாழ்த்துக்குரியவரே

ஆராதனை  ஆண்டவர்க்கே
ஆயுளெல்லாம்  ஆராதனை

1) விமர்சனங்கள்  வித விதமாய்
என்னை  சூழ்ந்து  நெருக்குகையில்
நீ என் தாசன் என்றீர்
விண்ணக சான்று  தந்தீர்

2) பெலவீனங்கள் பல விதமாய்
பெலனையெல்லாம் உறிந்த போது
கிருபை போதுமென்றீர் - உங்க
பெலத்தால் இடைகட்டினீர்