தேவன் நம் மேல் வைத்த கிருபை


தேவன் நம் மேல் வைத்த
கிருபை என்றும் பெரியது
அவரில் வாழும் வாழ்க்கை
அனுதினமும் சிறந்தது

1) கல்வாரி இரத்தத்தாலே
காயங்கள் ஆறுதே
கரடு முரடான
நம் வாழ்வும் மாறுதே
2) கர்த்தர் என் மேய்ப்பராம்
குறை ஒன்றும் இல்லையே
நன்மையும் கிருபையும்
அனுதினமும் தொடருமே

3) ஆவியில் அனலாய்
கொழுந்து விட்டு எரிய
அக்கினி அபிஷேகம்
இன்று தாரும் தேவனே

4) நித்திய ஜீவன் பெற
நீதியில் நிலைத்து நிற்க
கிருபை தாருமைய்யா
நீர் மட்டும் போதும்மைய்யா

5) கசந்த மாரா மதுரமாகும்
மாறாத மனமும்
மன்னவரால் மாறும்