அடைக்கலம் தேடி வந்தேன்


அடைக்கலம் தேடி வந்தேன்
ஆறுதல் தந்தீரைய்யா
உம் தயவினால் பிழைத்துக்கொண்டேன்
நன்றி நன்றி ஐயா

வாழ்நாளெல்லாம் உமைப்பாடுவேன்
நன்மைகள் பல செய்தீர் நன்றி ஐயா..

1) தகப்பனை போல சுமந்து கொண்டு
உம் கரம் என் மேல் வைக்கின்றீர்
தாயினும் மேலாய் தனி பாசம் வைத்து
தாங்குவீர் தலைமுறையாய்

2) எதிரிகளின் சூழ்ச்சி பெருகும் போது
எனக்காக யுத்தம் செய்தீர்
உனக்கெதிராய் எழும்பும் ஆயுதங்கள்
வாய்க்காதென்று வாக்களித்தீர்