உள்ளங்கையில் வரைந்தவரேஉள்ளங்கையில் வரைந்தவரே
என் இயேசைய்யா
என் உணர்வுகளை புரிந்தவரே
நீர் இயேசைய்யா

உமமையே நம்பியுள்ளேன் ஐயா

நான் உமக்காக வாழுவேன் இயேசையா

1) செல்லப்பிள்ளை அல்லோ

நான் உங்க மடியிலே
எனக்கு இல்லை கவலை
நீங்க பார்த்துக்கொள்வீங்க

2) பட்டம் பதவி யாவும் 

என்னோடு நிலைக்குமோ
நிலையான ஒன்று - உங்க
வார்த்தை மட்டும் தான். 

3) சொந்தம் பந்தம் எல்லாம்

எனக்கு நீங்க தான் - நான்
அள்ளி கொள்ளும் சொத்தும்
நீங்க மட்டும் தான்

4) வானம் பூமி யாவும்

உமது படைப்பல்லோ
உமது படைப்பிலே - நான்
உன்னத படைப்பு நான்