கூடவே வாருமைய்யா


கூடவே வாருமைய்யா - என்
குறைகளை தீருமைய்யா

1) நீங்க வந்தா பேயும் ஓடும்
நீங்க தொட்டா நோயும் தீரும்

2) உங்க நாமம் சொன்னாலே போதும்
நோயும் பேயும் தன்னாலே போகும்

3) உங்க கிருபை இருந்தால் போதும்
தகுதியில்லா வாழ்வும் மாறும்

4) உங்க சமூகம் இருந்தால் போதும்
எங்க சமூகம் எழுப்புதல் காணும்

6) உங்க மகிமை இருந்தால் போதும்
ஜெபமும் துதியும் வாழ்வாய் மாறும்

7) நீங்க வந்தா சிந்தை மாறும்
உங்க விருப்பம் வாழ்வாய் மாறும்