நீங்க செய்த நன்மைக்கு ஈடாய்


நீங்க செய்த நன்மைக்கு ஈடாய்
என்ன செய்வேன் என் தெய்வமே

1) பிறந்த நாள் முதற்கொண்டு இந்த நாள் வரையிலும்
ஆதரித்து வந்தீர் அதிசயம் செய்தீர்

2) தாயின் கருவில் உருவாகும் முன்னமே நீர் அறிந்தீர்
தாயைபோல ஆற்றி தேற்றி அரவணைத்து மகிழ்கின்றீர்

3) இந்த ஆண்டு முழுவதும் உமது இரத்தம்  காத்தது
இல்லையென்று சொல்லாது உதவி செய்து வந்தது.

4) வியாதி வறுமை சாபங்கள் மாற்றி நன்மை செய்தீர்
விலகாமல் கரம் பிடித்து கன்மலையில் நிறுத்தினீர்

5)ஜெபிக்க உதவி செய்தீர், வேதம் தியானிக்க உதவி செய்தீர்
கொடுக்க உதவி செய்தீர், உமக்காய் வாழ கிருபை தந்தீர்

6) சூழ்நிலையெல்லாம் எதிரான போது
சுற்றத்தாரும் எனக்கு பகை போது
சூழ்நிலையை மாற்றினீரையா
சுற்றத்தார் முன்பு உயர்த்தினீரையா