நினச்சு பார்க்க முடியாத


நினச்சு பார்க்க முடியாத
அற்புதம் செய்பவரே
எண்ணிமுடியா அதிசயங்கள்
எனக்கு செய்பவரே

ஆராதனை அற்புதம் செய்பவரே
ஆராதனை அகிலம் ஆள்பவரே

1) சோர்ந்து போன நேரம், மனம் உடைந்து கதறி நின்றேன். வார்த்தையாலே தேற்றி விட்டீரே..
உங்க வார்த்தை மட்டும் தேற்றாவிட்டால் மூழ்கி போயிருப்பேன்.
உங்க வார்த்தை மட்டும் இல்லையென்றால் மடிந்து போயிருப்பேன்.

2) பாவம் செய்து மரித்தேன், பாவியாக வாழ்ந்தேன்.
பாசத்துடன் என்னை அழைத்தீரே.
உங்க அன்பை நான் மறக்க இயலுமோ
உங்க ஆதரவை மறுக்க  இயலுமோ

3) உம்மை மறந்து தூரம் போனேன், மறுதலித்து வாழ்ந்தேன்
மறுபடியும் தேடி வந்தீரே
உங்க கிருபைக்கு நான் தகுதியில்லப்பா
உங்க கருணைக்கு நிகர் இல்லப்பா..