நேசத்திற்குரியவரே


நேசத்திற்குரியவரே
நேசிக்கிறேன் உம்மைத்தானே
பாசத்திற்குரியவரே - எல்லா
படைப்பிற்கும் காரணரே - 2

நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே
பரிசுத்தரே பலியானவரே - 2

1) விண்ணயும் மண்ணையும் படைத்தவர்
விண்ணக வாழ்வினை துறந்தாரே
மனிதனுக்கு சுவாசம் அளித்தவர்
மனிதனாகவே பிறந்தாரே - 2

2) ஆதியும் அந்தமுமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோராய்
ஆத்தும மீட்பை கொடுத்தவர்
ஆவியின் அருள்மாரி பொழிந்தாரே - 2

3) அற்புதம் அதிசயம் செய்பவர்
அனுதினம் என்னை காத்தாரே
உள்ளங்கைதனில் வரைந்தவர்
உயிரினில் உயிராக கலந்தாரே - 2

------------------------------------------------------------------------

Nesathirku uriyavarae
Nesikiren ummai thaanae
Pasathirku uriyavarae - Ella
Padaipitkum kaaranarae

Nesikiren ullam kavarnthavarai
Parisutharae Baliyanavarae

1) Vinnaium Mannaium padaithavar
Vinnaga valvinai thuranthare
Manithanuku suvasam koduthavar
Manithanagavae pirantharae

2) Aathium Anthamum aanavar
Aayiram pergalil siranthorai
Aathuma metpai koduthavar
Aavien arul mari polintharae

3) Arputham athisayam seibavar
Anuthinam ennai kaatharae
Ullankaithanil varainthavar
Uyirinil uyiraga kalantharae
----------------------------------------------------------------------
Special thanks to
Rev.A.Bemiliton @ Paramankurichi
Pastor.Mohanraj @ Jebathottam

TCN Media © All rights reserved.