நான் போகும் இடமெல்லாம்


நான் போகும் இடமெல்லாம்
ஜீவவாசனை வீசிடுவேன்.
வீட்டிலும் நாட்டிலும் எல்லா இடங்களிலும்
நான் நற்கந்தமாகிடுவேன்.

1) ஆவியின் கனியாம் குணங்கள்
அனுதினம் என்னில் வேண்டும் தேவனே
பிதா மகிமைப்பட திரள் கனி கொடுத்து
சாட்சியாய் வாழ்ந்திடுவேன்.

2) கையிடும் வேலைகள் யாவையும்
வாய்த்திட செய்திடும் தேவனே
உம் கரமதிலே பெற்று கொண்ட யாவையும்
உம் சேவைக்காய் விதைத்திடுவேன்.

3) கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை
வெற்றி சிறக்கப்பண்ணிடும் தேவனே
எல்லா இடங்களிலும் உந்தன் வாசனையை
எங்கள் மூலம் வெளிப்படுத்தும்