- by KIRUBAN JOSHUA
- 4 months ago
- 0
தேர்தல் கணிப்புகளும் சபை தீர்மானங்களும்
தேர்தல் கணிப்புகளும் சபை தீர்மானங்களும்
ஒவ்வோரு தேர்தலிலும் பலக்கணிப்புகள் பல எண்ணங்கள் மக்கள் இடையே ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் தற்காலத்தில் சிலர் கணிப்பது போலும், அவர்கள் சவால் விடுவது போலும் அப்படியே நடந்து கொண்டு வருகின்றது. அதே போல இந்த தேர்தலிலும் அவர்கள் சொன்னதையும் மீடியா கணிப்புகளையும் மற்ற கணிப்புகளையும் பார்த்து விட்டு சபை என்ன செய்ய போகிறது என்ற கேள்வியையும் கேட்க இதை பதிவு செய்கிறேன்.
A. பிஜேபி குறித்த கணிப்புகள்
இவர்களை குறித்து அவர்களே 400 இடங்கள் குறையாமல் பிடிப்போம் என்று சவாலிட்டு சொல்கிறார்கள்.
இவர்கள் குறித்து மீடியாக்கள் (பொதுவாக எல்லா மீடியாக்களும் அவர்கள் கையில்) சராசரியாக 360 இல் இருந்து 380 வரை பெறுவார்கள் என்று எல்லா மீடியாக்கள் சொல்கிறது.
இவர்கள் குறித்து குறி சொல்லும் சாமிகள், ஜோதிடர்கள் சொல்வது கிட்டதட்ட 329 இடங்களில் குறையாமல் வென்று மீண்டும் ஆட்சி அமைப்பார்கள்.
மக்கள் மனநிலையில் பொதுவாக இவர்கள் வரக்கூடாது என்று பொத்தாம் பொதுவாக காண்கிறோம்.
ஆனால் இதை இவர்கள் சாத்தியமாக்கும் தைரியத்தில் இருக்கிறார்கள்.. எப்படி?
👉🏻 அரசு இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்கட்சி வேட்பாளர்களை நிலை குலைய செய்தல். கட்சி நிதிகளை முடக்குதல், அமலாக்க துறைகள் கொண்டு மிரட்டுதல்
👉🏻 பொய் வழக்குகள் இட்டு மிரட்டி பணிய வைத்தல். மீடியாக்கள் மூலம் எதிர்க்கட்சிகளை ஊழல்வாதிகள் என்று கடுமையாக சித்தரித்தல்.
👉🏻 மந்திரங்கள், யாகங்கள், சூனியம், ஜோதிடம் மூலம் மனதை கட்டி காரியம் சாதித்தல்.
👉🏻 EVM ஓட்டு மெசினில் தில்லு முல்லு செய்து வெற்றியை திட்டமிடுதல்.
B. இந்தியா கூட்டணி குறித்து கணிப்புகள்
அவர்கள் குறித்து அவர்களே சொல்லிக் கொள்ளும் கணிப்பு 300 தொகுதிகளுக்கு மிகாமல் வெற்றி பெறுவோம்.
மீடியாக்கள் சொல்வது 120 தொகுதிகள் கூட வெற்றி பெறாது. ஆனால் பிஜேபி க்கு எதிரான You Tube channel கள் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் கணிக்கிறார்கள்.
ஜோதிடம், குறி சொல்லும் சாமிகள் தொடர்ந்து இந்த கூட்டணியை மட்டம் தட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்தவம் சார்ந்த ஒரு சில தீர்க்கர்கள் கூட இந்த கூட்டணி சிதறி விடும். மோடி தான் மறுபடியும் வருவார் என்று வாக்கு உரைக்கிறார்கள்.
பொதுவாக மக்கள் மனதில் இந்தியா கூட்டணி தான் வர வேண்டும். அதில் மம்தா பானர்ஜியின் செயலில் வருத்தம் கொள்கிறார்கள்.
இவர்கள் இந்த கணிப்பை அடைய என்ன செய்கிறார்கள்?
👉🏻 மோடியின் எதிர்ப்புகளை இவர் ஓட்டாக மாற்ற ராகுலின் பிரச்சாரத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.
👉🏻 ஒவ்வொரு நாளும் Raid மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு பயந்த நிலையில் கூட தெருவில் இறங்கி வேலை செய்து மக்களை சந்திக்கிறார்கள்..சில கட்சிகளின் வங்கி கணக்கு கூட முடக்கப்பட்டு இருக்கும் நிலையில் நெருக்கடிகள் மிக அதிகம். மோடி ஆட்சியில் தேர்தல் பத்திர ஊழல், மத வாத நிலை போன்றவற்றை சொன்னாலும் பெரும்பாலும் இவர்கள் மோடி கூட்டணியை எதிர்த்தாலும் மோடியின் இயந்திரம் வைக்கும் இலக்கில் இவர்கள் வலு இழந்து போகிறார்கள்.
👉🏻 Ballet Paper முறை மீண்டும் வர வேண்டும் என்கிறார்கள்..
👉🏻 பொதுவாக யாகம் போன்ற காரியங்களை சாரா விட்டாலும் எல்லா மதத்தினரையும் அவர்கள் வழிபாட்டு ஸ்தலங்களையும் முற்றுகையிட்டு வாக்கு கேட்கிறார்கள்.
C. தமிழ் நாட்டு தேர்தல் கணிப்புகள்
தமிழ் நாட்டில் 40 க்கு நாற்பதையும் இரு கட்சிகள் பெறுவோம் என்று திமுக மற்றும் அதிமுக கட்சிகள் சவால் விடுகிரார்கள். அதில் திமுக வாவின் confident level கொஞ்சம் ஜாஸ்தி.
வடக்கு மீடியாக்கள் 30 இடங்களை திமுக வெல்லும் என்றும் மற்ற கட்சிகள் 10 இடங்களை அதில் பிஜேபி 5 இடங்களை பெறும் என்கிறார்கள்.
ஜோதிடர்கள், குறி சொல்கிறவர்கள் 26 இடங்களை திமுக கூட்டணிக்கும் 14 இடங்களை மற்ற கூட்டணிக்கும் கிடைக்கும் என்கிறார்கள்..
மக்கள் பொதுவாக திமுக ஆட்சியில் உள்ள விமர்சனங்களையும் சொல்வதால் திமுக கூட்டணி 40 இடங்களில் கிடைக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
இப்படிப் பட்ட நிலையில் சபையின் கணிப்புகள் என்ன?
சில போதகர்கள், தீர்க்கர்கள் சொல்வது போல திரும்ப மோடி வரட்டும் என்று பேசுவதை கர்த்தர் அங்கீகரிப்பாரா?
கர்த்தர் அராஜகம், மத வெறி, கொலை, இரத்தம் சிந்துதல், விக்கிரக வல்லமை, கலவரங்கள் செய்தல், பிரச்சனைக்கு பேட்டி தராமல் ஓடி ஒளிதல், மிரட்டல்கள், வெளிப்படையான ஊழல்கள் போன்ற பின்னணியில் இருக்கும் ஒரு நபருக்கு ஆதரவாக நிற்பாரா?
இப்படிபட்ட நபர்கள் மற்றும் கும்பல்களுக்கு ஆதரவாக பேசும் நபர்களை நாம் கள்ள தீர்க்கர்கள் என்று சொல்வதில் பிழை இல்லையா? அப்படி அவர்கள் எல்லா குறி சொன்னவர்கள் சொன்னது போல இவர்களும் சொன்னது நடந்து விட்டால் சபையின் வல்லமை என்ன ஆகி விட்டது என்ற கேள்வி எழும்பும் இல்லையா?
கர்த்தர் சபைக்கு தந்த அதிகாரம் மற்றும் சபையின் வல்லமையால் இந்த தேர்தலில் அசாதாரணமான ஒரு விடுதலையை கொண்டு வர முடியுமா?
அப்படி எனில் சபை என்ன செய்ய வேண்டும்?
நமது ஜெபம் போதாது என்பதை அறிய வேண்டும்.
நம்மில் பாவம் மற்றும் அக்கிரமம் இருந்தால் ஜெபம் கேட்க படாது என்பதை அறிய வேண்டும்.
ஆவிக்குரிய சபைகளின் மதிப்பை உணராமல் சபைக்கு வெளியே கூடி பணம் கொடுத்து பிரபலம் பார்த்து விளம்பரம் பார்த்து ஜெபித்த ஜெபங்கள் ஒன்றுக்கும் உதாவது என்று அறிய வேண்டும்.
யோவானின் வெளிச்சத்தில் களி கூற நினைத்தவர்கள் அவர்கள் பாவத்தை விட்டு வெளியே வர விரும்ப வில்லை. பாவத்தை விட்டு வெளியே வந்து சிறிய சபையோ பெரிய சபையோ தங்கள் ஆவிக்குரிய சபையில் இணைய விட்டு கொடுக்க வேண்டும். பிரபல சுவிசேஷ ஊழியர்களை நம்பி அற்புத அடையாளங்கள் பின்னாடி போவதை நிறுத்த வேண்டும். சபையோடு சேர்ந்து ஊக்கமாக ஜெபிக்காமல் பிறர் ஜெபத்தை நம்பி தனி ஜெபம் செய்யாமல் இருக்கும் ஒவ்வொருவரும் மனம் திரும்ப வேண்டும்.
சபையாக ராக்காலங்களில் சபையின் உட்கதவை பூட்டு பேதுரு சிறைச்சாலையில் இருந்த போது ஊக்கமாக ஜெபித்தது போல ஜெபித்தால் ஒரு அசாதாரணமான அற்புதம் நடக்க வாய்ப்பு உண்டு.
அதையும் தாண்டி மதம், கலவரம் போன்றவற்றை கொள்கையாக கொண்ட ஆட்சி மீண்டும் வந்தால்!
சபை சீர்திருத்தம் செய்யப்பட போகின்றது.
சபை உபத்திரவத்தில் செல்ல ஆயத்தமாகின்றது.
தேசத்தில் அக்கிரமம் பெறுகின்றது.
ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கும் படலம் துவங்குகிறது.
ஜாதிக்கு ஜாதி, இனத்திற்கு இனம், மதத்திற்கு மதம் கலவரங்கள் வாசல்படியில் காத்து இருக்கின்றது.
பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும்.
வீடுகளில் பயந்து பயந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படும்.
👉🏻எனவே ஒன்றில் இந்த தேர்தலில் ஒரு தேசிய விடுதலை அல்லது சவாலுக்கு நம்மை நாமே மனதளவில் ஆயத்தமாக்கி கொள்வோம்.
👉🏻தேசத்தை சுதந்தரிப்பது எளிது ஆனால் கர்த்தர் நம்மோடு இருக்க வேண்டும் அதாவது சபையோடு இருக்க வேண்டும். பிரபலமானவர்களை அல்ல கர்த்தரை விசுவாசிக்க வேண்டும்
👉🏻 முக்கியமாக அவர்களை காக்கும் மந்திர, தந்திர, யாக, அதிகார மற்றும் எந்திர நிழல்கள் அவர்களை விட்டு விலக வேண்டும்.
👉🏻 எனவே இந்த காலம் மெளனமாக இருக்க வேண்டிய காலம் அல்ல. நதியளவாக கண்ணீர் சிந்தி புலம்ப வேண்டிய காலம். பிள்ளை பெற வேண்டும் ஆனால் பெலன் இல்லாத காலம். தேசத்தை சுதந்தரிக்க வேண்டும் ஆனால் மோசே இல்லாத காலம். ஆனாலும் பிள்ளை பேற்றை அவர் தடுக்க மாட்டாரே! யோசுவா மற்றும் காலேப் போன்ற சந்ததிகளை எழுப்பாமல் இருக்க மாட்டாரே! எஸ்தர் போன்ற ராஜ குமாரிகளை எழுப்பாமல் இருக்க மாட்டாரே!
எனவே இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம். கிருபை கூட இருப்பதாக
செலின்