- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0
நாம் பிறருக்கு ஆசீர்வாதமாய் இருப்பது எப்படி?
- by KIRUBAN JOSHUA
- July 23, 2024
- 0
- 167
மனிதர்கள் வாழுகின்ற இந்த சமுதாயத்தில் போட்டியும், பொறாமையும், சண்டைகளும், வன்கண்களும் நிறைந்து இருக்கிறது. இதன் நடுவில் ஒரு தேவ பிள்ளை எங்கே இருந்தாலும் (பள்ளிக்கூடம், கல்லூரி, அலுவலகம்) பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பது எப்படி? (1 பேதுரு 3:8,9)
செய்ய வேண்டியவைகள்:
1. ஒரு மனமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
2. இரக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
3. சகோதர சிநேகமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
4. மன உருக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
5. இணக்கமுள்ளவர்களாய் இருங்கள். (1 பேதுரு 3:8)
செய்யக்கூடாதவைகள்:
1. தீமைக்கு தீமை செய்யாதீர்கள். (1 பேதுரு 3:9)
2. உதாசீனத்திற்கு பதிலாக உதாசீனப்படுத்தாதீர்கள். (1 பேதுரு 3:9)
இவ்விதம் வாழ்வோம் என்றால், “எந்த சூழ்நிலையிலும் நாம் பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்போம்.”
கே. விவேகானந்த்