ஆங்கில போதகர் ஒருவர் ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம்
ஒருமுறை ஆங்கில போதகர் ஒருவர், இந்தியாவில் நற்செய்திப் பணி செய்வதற்கு மிகுந்த ஆவல் கொண்டார். எனவே அவர் இந்திய நாட்டிலுள்ள ரவீந்திரநாத் தாகூருக்கு ஒரு கடிதம் எழுதி ஆலோசனை கேட்டார்.
அப்பொழுது அவர் பின்வருமாறு பதில் எழுதினார். எங்கள் தேசத்தில் கிறிஸ்துவின் சாயலை அணிந்து அவரை போல் ஜீவிக்க ஆசை உண்டானால் தாராளமாய் வாரும். அது மிகுந்த சந்தோஷம், ஆனால், எங்களுக்குப் போதகம் செய்வது மாத்திரம் உமது முக்கிய நோக்கமாக இருந்தால் தயவு செய்து வர வேண்டாம். நற்செய்திப் பணி என்பது அறிவிப்பது மட்டுமல்ல, அது வாழ்ந்து காட்டுவது.
1843 ஆம் ஆண்டு, பிறந்த ஜேம்ஸ் கில்மோர் தான் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இதனை ஆழமாக உணர்ந்தார்.
தன்னை ஆண்டவரின் பணிக்கு மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்தார். 1867 ஆம் ஆண்டு மிஷனெரியாக தன்னை அர்ப்பணம் செய்தார். 1870 ஆம் ஆண்டு போதகராக அபிஷேகம் பெற்று, நாமடிக் மொழி பேசும் புத்த மத வைராக்கியமுள்ள மங்கோலிய இன மக்களைத் தேடி புறப்பட்டார்.
அங்கு வாழ்ந்த மக்களைப் போன்றே தன் உடையை மாற்றினார். தன் மொழியை மாற்றினார். தன் வாழ்வையே அம்மக்களுக்காய் அர்ப்பணித்தார். பல உபத்திரவங்கள் அவருக்கு ஏற்பட்டபோதும், தன் தீர்மானத்திலே உறுதியாக நிலைத்து நின்றார்.
தன் அன்பு மனைவி நோயினால் மரித்த பின்பும், 21 வருடங்கள் அம்மக்கள் மத்தியிலேயே பணி செய்து, கிறிஸ்துவின் சாயலை பிரதிபலித்து அநேகமாயிரம் ஆத்துமாக்களை கிறிஸ்துவின் மந்தையில் வழி நடத்தினார்.
இதை வாசிக்கும் நீங்களும் நானும், இயேசுவின் சாயலை தரித்து, அவருக்காய் அவரை போல வாழ அர்ப்பணிப்போம்! ஆமென்!
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். (#எபேசியர் 4:24)