பைபிள்: குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும்

குழந்தை சுஜித்துக்கு ஏற்பட்ட நிகழ்வு நம்மை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகிலேயே பழமையான, கிட்டத்தட்ட 3, 625 ஆண்டுகளுக்கு முன்பு எழுத பட்டுள்ள ஒரு புஸ்தகத்தின் பெயர் யாத்திரை ஆகமம். இது பைபிளில் இடம்பெற்றுள்ள ஒரு புஸ்தகம்.
நீங்கள் பைபிளை திறந்தவுடன் இது இரண்டாவதாக இருக்கிறது.
இந்த யாத்திரை ஆகமம் புஸ்தகத்தின் 21 ம் அதிகாரம், 33, 34, ம் வசனங்களில் நாம் என்ன வாசிக்கிறோம் என்றால், ஒருவன் ஒரு குழியை திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதே போனதினாலாவது அதிலே ஒரு மாடாவது, ஒரு கழுதையாவது விழுந்தால், குழிக்கு உடையவன் அதற்க்கு ஈடாக பணத்தை, மிருகத்தின் எஜமானுக்கு கொடுக்க கடவன், செத்ததோ அவனுடையதாக வேண்டும்.
பிரியமானவரே, குழியை வெட்டினால், அதை மூடி வைக்க வேண்டும் என்று “உயிருள்ள கடவுள்”தனது பிள்ளைகளுக்கு எழுத்து மூலம் அறிவுரை கொடுத்துள்ளார், இதனை உயிருள்ள தெய்வத்தை நம்பும் அனைவரும் ஏற்று, இனிவரும் நாட்களில் நடப்போம்,
உயிர் பலிகளை தவிர்ப்போம். பைபிளை திறந்து இந்த நல்ல ஆலோசனையை வாசித்து பார்க்க உங்கள் யாவரையும் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.