c.t. studd biography

ஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் சி.டி. ஸ்டட்

c.t. studd biography

தேவ ஊழியரான சி.டி. ஸ்டட் வயது முதிர்ந்தவரானார். சரீரம் முழுவதும் பலவகைபட்ட வியாதிகளால் பீடிக்கப்பட்ட நோயாளியாக, தளர்ந்துபோய் இருந்தார். ஒருநாள் ஆலயத்தின் அழைப்பு அவர் கண்களில் பட்டது, “மிலேச்சர்களுக்கு மிஷனெரிகள் தேவை” என்பதே! தன் மனைவி, பிள்ளைகள் பேரக் குழந்தைகளை விட்டுவிட்டு, உடனே மிஷனெரியாக ஆப்பிரிக்கா புறப்பட்டார்.

தன் பெலவீனத்தோடு 17 ஆண்டுகள் ஆப்பிரிக்க காடுகளின் மலைவாசிகள் மத்தியில் ஊழியஞ் செய்தார். ஒரு இரவு, அவர் படுக்கையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்தார். தாங்க முடியாத வலியால், அவர் துடித்துக்கொண்டிருந்த படியால், அவரது உதவியாளர் வலி நீக்கும் சில மாத்திரைகளைத் கொடுத்து, அருகிலேயே இருந்து கவனித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது இரவு 11 மணி. அப்பொழுது சி.டி. ஸ்டட், உதவியாளரிடம், “நான் அப்போஸ்தலர் நடபடிவரை, புதிய மொழியில் மொழி பெயர்த்திருக்கிறேன். மீதியையும் முடிக்க வேண்டுமே” என்றார்.

மரணத்தோடு போராடிக்கொண்டிருந்தாலும் அந்த மிஷனெரி, ஊழிய பாரத்தால் நிறைந்திருந்தார். மீண்டும் அவரது உதவியாளர், அவரைப் பார்க்க விடியற்காலை 3 மனிக்கு வந்தபோது, அங்கே மிஷனெரியை காணவில்லை. படுக்கைக் காலியாக இருந்தது. அதில் எழுதப்பட்ட குறிப்பை வாசித்தார், “என் அருமை உதவியாளரே, என்னால் படுத்திருக்க முடியவில்லை. இன்னும் ஒரு மலை ஜாதி இதுவரை இயேசுவை அறிந்து கொள்ளவில்லை. அவர்களைச் சந்திக்க என் சைக்கிளில் புறப்பட்டுச் செல்லுகிறேன்.” ஆச்சரியத்தால் வாயடைத்துப் போனார், அந்த உதவியாளர்! சி.டி. ஸ்டட் என்ற அந்த மிஷனெரியின் தியாகமான ஊழியம் அநேகருக்கு சவாலாய் அமைந்தது. அநேக மிஷனெரிகளை உருவாக்கியது.

“பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பியவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது” (யோவான் 9:4)

Share this page with friends