பூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்கவேண்டும்!

Share this page with friends

இன்னொரு யோசுவா’ தான் பிறக்கவேண்டும்!

Lock down -ல் Lock ஆகாமல்
சுற்றிக்கொண்டிருப்பது பூமி மட்டுமே !
பூமிக்கு Lock down போட இன்னொரு யோசுவா தான் பிறக்க வேண்டும்!
(யோசு .10:13)

பூமிக்கு தொற்றுமில்லை
என்மேல் பற்றுமில்லை
வானத்தையும் பூமியையும்
உண்டாக்கினவருக்கே
என் மேல் அளவில்லா பற்று .
இதோ, இஸ்ரவேலை காக்கிறவர்
உறங்குவதுமில்லை
தூங்குகிறதுமில்லை
(சங்.121:4)

காலைதோறும் விசாரிக்கிறார்
இந்த Lock down நாட்களில்
நிமிஷந்தோறும் சோதித்தறிகிறார்
(யோபு 7:18).

ஏனென்றால் என்னை என்
தாயின் வயிற்றில் 1963-ல்
காப்பாற்றியதும், என்னை அழைத்ததும் அவர் தானே
(சங்.139:13)

முன்னோர்கள் சொன்னார்கள்; ஆனால்..?

கோயிலும் குளமும் அடுத்தடுத்து இருக்க வேண்டும்
என்று சொன்னார்கள் முன்னோர்கள்;
இந்த இரண்டுக்கும் நடுவேதான் இருக்கிறேன் – ஆனால்
முன்னதில் ஆளில்லை
பின்னதில் தண்ணீரில்லை

ஆனால் எனக்குள்ளே இரண்டும் இருக்கிறது
அதாவது கோயிலும் குளமும் இருக்கிறது

நானே தேவனுடைய ஆலயம்
எனக்குள்ளே ஜீவதண்ணீர்!

எனக்குள்ளே ஜீவஊற்று
அது வற்றாது ஒரு நாளும்

Father S. J. Berchmans

தந்தையின் பாடல் வரிகள்

பாஸ்டர் ஜே.இஸ்ரேல் வித்ய பிரகாஷ்,
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14


Share this page with friends

You may also like...