கருத்துக்களம் சிறப்பு விருந்தினர் அறை

× அறிவிப்பு: இப்பக்கத்தை பிறருக்கு பகிர அனுமதி இல்லை
 
17.09.2020 (6.30 -7.30 PM)

 வரவேற்கிறோம் !

கருத்துக்களம் நேரலை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தங்களை மனதார வாழ்த்துகிறோம்..! வரவேற்கிறோம்..!!

நமது ஊடகத்தின் வாயிலாக வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கருத்துக்களம் நிகழ்ச்சியானது நேரலையில் நடத்தப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்து வரும் இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் நீங்கள் பங்குபெறுவதை நாங்கள் பாக்கியமாக கருதுகிறோம்.

சிறப்பு விருந்தினர்களின் கனிவான கவனத்திற்கு

1) நேரலை நிகழ்ச்சியில் குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நீங்கள் இருக்கும் இடம் வேகமான இணைய வசதி உள்ள இடமா என்பதையும், Internet Data போதுமான அளவு உள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

2) இப்பக்கத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர்களின் நுழைவு வாயிலில் Click Here செய்யுங்கள். Display Name கேட்கும் போது உங்களது பெயரை Type செய்யுங்கள். ஆடியோ வீடியோவை Allow பண்ணுங்கள். இவைகளில் சந்தேகமிருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும்.

3) நேரலை நிகழ்ச்சி துவங்கும் 15 நிமிடத்திற்கு முன்னதாகவே எங்களது Studio Control Room-ல் இணைந்துவிடுங்கள்.

4) உங்களது சுற்றில் உங்கள் கருத்தை அழுத்தமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் வேதவசனத்தினை மையமாக கொண்டு தலைப்பினையும் கேட்கப்படும் கேள்வியையும் புரிந்துகொண்டு பேசுங்கள்.

5) நிகழ்ச்சியின் போது ஒருவருடைய கருத்தில் பிழை இருப்பதாக நீங்கள் உணரும் பட்சத்தில் உங்கள் தரப்பு நியாயத்தினை தெளிவுபடுத்த உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆயினும் உங்களது அனுகுமுறையில் அன்பும் சாந்தமும் மேலோங்கியிருக்கட்டும்.

6) நிகழ்ச்சியின் போது எவ்வித தனிநபர்/குடும்பம்/ஊழிய ஸ்தாபனங்கள்/அமைப்பு ஆகியற்றினை நேரடியாக பெயர் குறிப்பட்டு விமர்சிப்பபதை தவிர்ப்பது நல்லது. குறிப்பிட்ட நபர்/இடம்/அமைப்பு என்ற பொதுவான பதங்களை பயன்படுத்துங்கள்.

7) நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு பேச்சாளர்களும் கனத்துக்குறியவர்கள். ஆகவே கண்ணியத்துடன் அவர்களுக்கு மதிப்பளித்து நல்லுறவை வளர்த்துக்கொள்ளுங்கள்.

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3 : 15)


சிறப்பு விருந்தினர்களின் நுழைவு வாயில்


கூடுதல் விபங்கள்/சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்

நேரலைக்கு முன்/பின்:
+91 97503 81784

நேரலையின் போது:
+91 63796 56692


For the kind attention of special guests