How should Christians approach the poor?
ஏழைகளை கிறிஸ்தவர்கள் எப்படி அணுகவேண்டும் என்று தேவன் எதிர்ப்பார்க்கிறார்? (பகுதி-1)
ஏழைக்கு இரங்கவேண்டும் என்று எதிர்பார்கிறார்!
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
நீதிமொ.19:17
ஏழைக்கு இரங்குவதென்றால் அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பதாகும்.
வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும் சகோதர சகோதரிக்கு:
“நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள்” என்று வெறும் ஆறுதல் வார்த்தை மட்டும் சொல்லாமல், அவர்களுடைய சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
(யாக்.2:15,16)
தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று காண்கிற இவ்வுலக ஆஸ்தி உடையவர்கள் தங்கள் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொள்ளாமல், அவனுக்கு உதவிசெய்யவேண்டும். (1யோவான் 3:17,18)
குணசாலியான ஸ்திரீ சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள் என்று சாலமோன் சொல்லுகிறார்.
(நீதிமொ.31:20)
ஆண்டவரை சந்திந்த சகேயு, தன் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கத் தீர்மானித்தார்.
(லூக்கா 19:8)
ஏழைக்கு இரங்குகிறவர்களுக்கு கர்த்தர் இரங்குகிறார்! அவர்கள் ஏழைகளுக்குக் கொடுக்கிறதைத் தேவன் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கிறார்.
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும், அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். சங்கீதம் 112:9 என்கிறார் சங்கீதக்காரர்.
இதையே
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
2கொரிந். 9:9 விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார். 2கொரிந். 9:10 என்கிறார் பவுல்.
நாம் பேர்பெற்றவர்களாய் இருப்பதோடு, நமது நீதி என்றும் நிலைநிற்க, வர்த்திக்கப்பட நாம் ஏழைகளுக்குக் கொடுக்கிறவர்களாய் இருக்கவேண்டும்.
ஆதிசபை ஊழியர்களைப் போலவே வசதியான விசுவாசிகள் ஏழை விசுவாசிகளுக்குப் பகிர்ந்துகொடுக்க இன்றைய ஊழியர்களும் உபதேசிக்கவேண்டும். (அப்.2:42,44,45; 4:32,34,35; 1தீமோத்.6:17-19; யாக்.1:27, 2:15,16; 1யோவான் 3:16-18)
ஒரு ஊழிய ஸ்தாபனத்தின் கீழ் ஊழியம் செய்கிறவர்களில், ஏழை ஊழியர்களையே அதிகம் விசாரிக்கவேண்டும்.
கிறிஸ்தவர் நடத்தும் நிறுவனங்களில் திறமையுள்ள ஏழைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்!
வசதியுள்ள கிறிஸ்தவர் ஏழை கிறிஸ்தவரின் வீட்டில் வரதட்சனை வாங்காமல் பெண் எடுத்து, பெண் கொடுத்து அவர்கள் வாழ்வு உயர உதவவேண்டும்!
கஷ்டப்படும் எந்த மதத்தவர்க்கும் இனத்தவர்க்கும் இயன்ற உதவியை செய்ய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்!
ஏழைகளுக்குக் கொடுப்பதற்கான செல்வத்தையும் சேர்த்தே தேவன் நம்மிடம் கொடுத்திருக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும்!
கிருபை உங்களோடிருப்பதாக!!
– க. காட்சன் வின்சென்ட்