திருச்சபைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஆபத்தா? ஆசிர்வாதமா?

திருச்சபைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
ஆபத்தா? ஆசிர்வாதமா? வாருங்கள் அலசி பாருங்கள்
இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையிலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
பிலிப்பியர் 1:18 இந்த வசனத்தின் படி எப்படியாவது கிறிஸ்து அறிவிக்கப்படலாம் ஆனால் எப்படியாவது திருச்சபைகள் ஆரம்பிக்க கூடாது. இக்காலங்களில் திருச்சபைகள் எப்படி ஆரம்பிக்கப்படுகிறது என்றால்
1.போட்டியினால்
2.ஒரு சபையில் இருந்து பிரிந்து
3.பெருமைக்காக
4.சாதிய வாரியாக
5.பணம் இருக்குறதே என்பதற்காக
6.ஸ்தாபன வளர்ச்சிக்காக
இந்த ஆறு விதமான நோக்கத்தோடு ஆரம்பிக்கும் சபைகள் இடங்கள் வாங்கி கட்டிடங்கள் கட்டலாம். ஆனால் ஒரு மகிமையான வளர்ச்சிக்கு ஏதுவான திருச்சபைகளை கட்டி எழுப்ப முடியாது. இப்படி ஆரம்பிக்கப்படும் திருச்சபைகள் ஒரே தலைமுறையில் முடிந்து விடும். அடுத்த தலைமுறையில் இருந்த இடமும் அதை அறியாது. ஆகவே கிறிஸ்தவ திருச்சபைகள் மற்றவர்களின் அஸ்திபாரத்தின் மேல் கட்டுப்படாமல் தேவனுடைய சித்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் பேரில் ஆரம்பிக்கப்பட்டால் திருச்சபையின் வளர்ச்சி ஆச்சரியமாக இருக்கும் அபரிதமாகவும் இருக்கும். இப்படி தேவசித்தத்தின் படி ஆரம்பிக்கப்படும் திருச்சபைகள்
1.எந்த விதமான உபத்திரவங்கள் வந்தாலும் அந்த உபத்திரவத்தின் மத்தியிலும் வளரும்.
2.தரமான விசுவாசிகள் உருவாகுவார்கள்.
3.பொருளாதார தேவைகள் மகிமையாய் சந்திக்கப்படும்.
4.மிஷனரிகள் அனுப்பப்படுவார்கள்.
5.தலைமுறை தலைமுறையாக திருச்சபை நிற்கும்.
6.கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தாலும் ஆழமாக வேரூன்றி வளரும்.
7.ஆத்துமாக்கள் தேடி வருவார்கள்.
8.சபையில் அற்புதங்கள் நடக்கும்.
9.திருச்சபை வசனத்திலும் பக்தியிலும் வளர்ச்சி அடையும்.
10.நற்சாட்சி பெற்ற திருச்சபையாக இருக்கும்.
ஆகவே மாம்சத்தின் படி ஆரம்பிக்கும்
திருச்சபைகள் ஆபத்தானது இது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றது அல்ல தேவ நாமத்திற்கு மகிமையை கொண்டு வராது. தேவ சித்தத்தின்படியும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் பேரிலும் ஆரம்பிக்கப்படும் திருச்சபைகளே ஆசிர்வாதமானதும்
தேவ நாமத்திற்கு மகிமையை கொண்டு வரும். ஆமேன்.
David Livingstone