வரிக்குதிரைகளின் வாயை அடைத்த இயேசு!

Share this page with friends

தன் பிரசங்கத்தை விளக்குவதற்கு ஒரு வெள்ளிக்காசை இன்னொருவரிடமிருந்து கேட்டு வாங்க வேண்டிய நிலையில் இயேசு இருந்தார். ஆனாலும் அந்த வெள்ளிக்காசை அவர் தொட்டுப்பார்த்து, இது யாருடைய சொரூபம் என்று கேட்கவில்லை. தொட்டுப் பார்க்காமலேயே சுட்டிக் காட்டி சுருக்கமாய் விளக்கி பிரசங்கத்தை முடித்தார்.  


இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ என்று கேட்டு, இயேசுவை வாய்மொழியில் சிக்கவைக்க  ஓடி வந்த வரிக்குதிரைகள்,  வரிக்காசை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தன. (மத்தேயு 22:17-22) பிணத்தைத் தொட்டு எழுப்பினார். (யவீரு மகளை) ஆனால் பணத்தைத் தொட்டுப் பாக்கெட்டில் போடவில்லை.

ஆகானின் டார்க்கெட் &  மணி மார்க்கெட் எல்லாம்  ஆகோரின் பள்ளத்தாக்கில் முடிந்தது நினைவிருக்கலாம். பணம் அவசியம்தான். ஆனால் பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேர்.

விசுவாசியே, அழைக்கப்பட்ட தேவ பிள்ளையே  இந்த வேருக்கு தண்ணீர் ஊற்றி பணமரத்தை வளர்க்காதே. பனை மரமாக நின்றிடு. நீதிமான் பனையைப்போல செழிப்பான்.

தூண்டில் போட்டு மீனைப் பிடிமுதலில் அகப்படுகிற மீனின் வாயைத் திறந்து பார், வெள்ளிப்பணம் இருக்கும். இந்த செயல்முறை ஒருமுறை மட்டுமே! அடுத்த முறை workout ஆகாது.

இதே பேதுரு தானாக செயல்பட்டு  சில சீஷர்களை  இழுத்துக்கொண்டு ஓடி இராமுழுதும் வலை போட்டு ஒன்றும் பிடிக்கவில்லை என்பது நினைவிலிருக்கட்டும். இயேசு சொன்னால் சொன்னபடியே முதலாவது பிடிக்கிற மீனின் வாயில் வெள்ளிப் பணம் இருக்கும் இல்லாவிட்டால் ஆயிரம் மீனைப் பிடித்து எல்லா வாய்களையும் திறந்து பார்த்தாலும் ஒரு மீனிலும் வெள்ளிப்பணம் இருக்காது. 

தண்ணீர் மதுரமான ரசமானது ஒருமுறைதான்! மும்முறை மரித்தோரை எழுப்பியது முறையே ஒருமுறை தான். இயேசு முதலாம் அற்புதத்தை கானா ஊரில் செய்து,தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார். சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்’. யோவான் 2:14

அற்புதம் எதற்காக எல்லாமே விசுவாசம் வைக்கத்தான், பணம் சம்பாதிக்க அல்ல .விசுவாசிக்கிறவனுக்குஎல்லாம் கூடும். 

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ், ஜீவத்தண்ணீர் ஊழியங்கள்-மதுரை


Share this page with friends

You may also like...