நிச்சயிக்கப்பட்ட அல்லது ஒருவருக்கு ஒருவர் நியமிக்கப்பட்ட யோசேப்பு மற்றும் மரியாள்

யூதர்களின் மரபின் படி திருமணம் நான்கு நிலைகளில் நடக்கிறது.
முதலாவது குடும்பத்தில் உள்ள மூத்தோர், பெற்றோர், மற்றும் கனம்பெற்றோர் மூலம் தங்களது பிள்ளைகளுக்கு அவர்கள் சுபாவம் அறிந்து அவர்களுக்கு ஏற்ற வரனை தேடி கண்டுபிடித்து, தங்கள் நிலைகளை எடுத்து சொல்லி யூத ரபீயின் முன்னிலையில் உறுதி செய்யபட்டு பின்னர் ஒப்பந்தம் போடப் படும். அதற்கு ketubah என்று பெயர்.
இரண்டாவது kiddushin என்கிற பாரம்பரிய சுத்திகரிப்பு முறைமைகளின் படி சம்பிரதாய நிச்சயார்த்தம் நடக்கும். இதில் கற்புக்கு உரிய சோதனை நடைமுறைகள் பின்பற்றி இருவரும் virgins என்று declare செய்து அதற்கு அடையாளமாக ஒருவரும் திருமணம் செய்து கொள்ளும் வரை காத்துக்கொள்ள ரகசிய காப்புறுதி பரிசு பொருட்கள் கொடுத்து ஒருவரை ஒருவர் குறித்த காலம் காத்திருக்க செய்வர்.
மூன்றாவது இதற்கு இரு வீட்டாரின் நல்ல ஒத்துழைப்பு பரஸ்பரம் புரிதலின் படி நியமிக்கப்பட்டவர்கள் இருவரும் பெரியவர்கள் குருக்கள் முன்னிலையில் தனியாக நிறுத்த பட்டு wedding ring அணியப் பட்டு அவரவர் தங்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வார்கள். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் வரன் தனது மதுவை தனது வீட்டில் ஏற்று கொள்வதற்கு எல்லா ஒழுங்குகளையும் செய்து, ஸ்தலத்தையும் ஆயத்தம் செய்த பிற்பாடு ரகசியமாக தன்னுடைய தோழர்களோடு மதுவை அழைத்து கொண்டு போக வருவார். அதுவரை இங்கு மது தனது தொழிகளோடு காத்து இருப்பார். இதற்கு பெயர் chuppah
நான்காவது nissuin என்கிற திருமண சடங்கு குறிப்பிட்ட மக்களோடு குறிப்பிட இடத்தில் நடத்தப்படும். இது கிட்டத்தட்ட நான்கு முதல் ஏழு நாட்கள் விரிந்து மற்றும் கொண்டாட்டங்களில் முடியும். இதற்கு இரு வீட்டாரும் எப்போதும் chuppah வில் இருந்து ஆயத்தம் ஆகி இருக்க வேண்டும். ஏனெனில் இது மிகவும் நேர்த்தியாக அழைக்கப் படவர்கள் முன்னிலையில் மட்டும் நடக்கும் சடங்கு. இதற்கு பின்னர் மது வரணின் வீட்டிற்கு தனக்கு உரிய எல்லா சம்பத்துகளோடு அழைத்து கொண்டுபோக படவேண்டும்.
அப்படி நிச்சயிக்கப்பட்ட யோசேப்பு மற்றும் மரியாளின் சுபாவங்களை தொடர்ந்து தியாணிப்போம்.
யோசேப்பு:
இவன் நீதிமான் மற்றும் நல்லவன்.
A.மரியாளை அவமானப்படுத்த விரும்பாதவர்.
பிறரை அவமானம் செய்யாத நல்ல சுபாவம். இன்று ஒரு திருமணம் நடப்பதற்கு மாறி மாறி பிறரை அவமானம் செய்யும் போக்கு பெருகி விட்டது. அப்படி பிறரை, தனது மதுவை எந்த சூழலிலும் அவமானம் செய்யாத நல்ல வரன் தான் நீதிமான்.
B. தரிசனம் காண்கிறவன்.
ஒருவன் வாழ்வின் எதிர்காலத்தில் எப்படி நடக்க வேண்டும் என்கிற தேவ ஆலோசனை பெற வேண்டும் எனில் அவன் தேவனோடு உறவாடுகிறவனாக இருக்க வேண்டும். தனது குடும்பம் குறித்து தரிசனம் இல்லாதவன் நீதிமான் அல்ல. கிட்டத்தட்ட மூன்று இடங்களில் தரிசனம் கண்டு தனது குடும்பத்தை நேர்த்தியாக நடத்துகிறார்.
C. சிந்திக்கிற சுவாவம் உடையவன்.
யார் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்று கொள்ளாமல் அதை நிதானித்து, ஆராய்ந்து பார்த்து பகுத்தறிந்து சிந்தித்து தீர்மானம் எடுக்கும் ஒரு நல்ல சுபாவம் நிச்சயம் சந்தேகம் மற்றும் பெரும் குழப்பங்களை தாண்டி நிச்சயம் வெற்றி கொள்ளும். அந்த நல்ல சுபாவம் தான் யோசேப்பின் நீதி தன்மையை வெளிப்படுத்தியது.
D. சேர்த்துக்கொண்டு காப்பாற்றுகிறார்.
மரியாளை தரிசனம் மூலம் பெற்ற எச்ச்ரிப்பின் அடிப்படையில் ஐயம் நீங்கி தன்னோடு சேர்த்துக்கொண்டு குடிமதிப்பு எழுதும் போதும், எரோது கொலை செய்ய முற்பட்ட போதும், குழந்தை பிறந்த போதும் காப்பாற்றி பாதுகாக்கிறது மிகவும் அருமையாக எழுதப்பட்டு உள்ளது. தனது மனைவியை சொந்த சரீரமாக ஏற்று கொண்டு போசித்து, காப்பாற்றி பாதுகாக்க வேண்டியது ஒரு புருஷனின் கடமை. அதை செய்ய தகுதி இல்லையெனில் திருமண பந்தத்தில் இணையாமல் இருப்பது நலம்
இந்த நான்கு சுபாவங்கள் ஒரு புருஷனிடம் இருந்தால் அவன் திருமணத்திற்கு நிச்சயமாக கொள்ள தகுதியான நபர்.
மரியாள்.
கிருபை பெற்றவள் மற்றும் கற்புள்ள கன்னியாக இருந்தாள். நான்கு அதற்குரிய சுபாவத்தை தியானிப்போம்.
A. பரிசுத்த ஆவியினால் நிறைய தன்னை தகுதிப்படுத்தி இருந்தாள்.
யாருடைய வாழ்வில், துதி, வேத தியானம், ஜெபம் மற்றும் பரிசுத்த ஜீவியம் இருக்கிறதோ அவர்கள் மூலம் தான் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்ய முடியும். அப்பொழுது தான் அவர் எப்பொழுதும் அவர்களோடு தங்கி இருக்க முடியும் ஏனெனில் ஆவிக்குரிய விதத்தில் நடப்பவர்கள் ஜீவனை பெற்று கொள்வார்கள். யார் தனது ஆவி, ஆத்துமா, சரீரத்தை தீட்டுபடுத்தாமல் வாழ்கிறார்களோ அங்கு பரிசுத்த ஆவியானவர் தங்கி இருப்பார்.
B. யோசனை செய்யும் சிந்தனை செய்யும் புத்தியுள்ள ஸ்தீரியாக இருந்தாள்.
தனக்கு சொல்லப்பட்ட அனைத்தையும் இருதயத்தில் வைத்து தியானம் செய்தாள். புத்தியுள்ள ஸ்த்ரீ தன் வீட்டை கட்டுகிறாள். எப்போதும் உணர்ச்சி வசப்பட்டு கொண்டு இருப்பவர்கள், எதையும் சிந்திக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசி கொண்டு, பிறரது ஆலோசனைகளை சிந்திக்காமல் முருமுறுத்து, கோல் பேசி, தன்னிச்சையாக செயல்படும் ஸ்த்ரீ வீட்டுக்கு சாபம் கேடு தான். ஆனால் மரியாளை பார்த்தால் சிந்தனை செய்யும் நல்ல ஒரு கன்னிகையாக இருந்தாள். அறிந்து செயல்படாத பெண்ணும் மழுங்கி போன கத்தியும் வீட்டிற்கு ஆகாது என்கிறது பழமொழி.
C. தான் ஒரு அடிமை என்று தேவ சித்தத்திர்க்கு ஒப்பு கொடுத்த மரியாள்.
மரியாள் நன்றாக அறிந்து இருந்தாள், தான் இதற்கு ஒப்பு கொண்டால் வாழ்நாள் முழுவதும் அவமானம் நிந்தை அடைய வேண்டும் ஏனெனில் யாரும் நம்ப மாட்டார்கள். கிறிஸ்துவின் நிமித்தம் அவமானம் நிந்தை சகித்து காத்து இருக்கும் இடத்தில் நிச்சயம் பாக்கியமும் நன்மையும் உண்டு. ஆனால் இன்று தான் செய்த தவறினால் வந்த அவமானத்தை மறைக்கவே பல திருமணங்கள் அவசரம் அவசரமாக நடத்தி முடித்து பின்னர் தோல்வில் முடிகிறது. ஆனால் நீதியின் நிமித்தம் அவமானம் ஏற்பட்டு நன்மைகள் கால தாமதம் ஆகிறது என்றால் நம்பிக்கை கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் பாக்கியவான்கள்.
D. மரியாள் எழுந்து மலைநாட்டிற்கு பிரயாணம் செய்து தனக்கு ஒத்த அனுபவம் பெற்றவர்களோடு நேரத்தை செலவிட்டார்.
தான் கற்பவதியாக இருக்கும் போதே அநேக பிரயாணத்தை இந்த மரியாள் சந்திக்க வேண்டி இருந்தது. அதில் விசேஷமாக எலிசபெத்தை சந்திக்க புறப்பட்ட நோக்கம் மிகவும் ஆச்சரியமானது. கிருபை பெற்றவர்கள் எப்போதும் கிருபை பெற்றவர்களோடு தான் தங்கள் நேரத்தை செலவிடுவார்கள். வீண் அலுவல்கள் அவர்களுக்கு இல்லை. வீணான இடம், வீணான அலுவல் மற்றும் வீணான நபர்கள் அவர்களுக்கு தேவை இல்லை. ஏனெனில் அவர்களுக்கு தெரியும் உண்மையான மகிழ்ச்சி, மற்றும் சந்தோசம் கிருபை பெற்ற கூட்டத்தில் தான் இருக்கிறது.
இது தான் நீதிமான் என்று பெயர்பெற்ற யோசேப்பு, கிருபை பெற்ற மரியாள் என்கிற நியமிக்கப் பட்ட வரன் மற்றும் மது. இவர்கள் தான் இன்றைய கர்புள்ள வாலிபர்களுக்கு அல்லது திருமணத்திற்கு ஆயத்தம் ஆக காத்திருக்கும் வாலிபர்களுக்கு நல்ல மாதிரி. இந்த கிறிஸ்மஸ் அப்படிப்பட்ட சந்தோசத்தை உங்களுக்கு தரட்டும்.
கர்த்தர் கிருபை கூட இருப்பதாக!
செலின்.