சர்வதேச வேதாகம சங்கம் தோன்றிய ஆச்சரியமான வரலாறு

Share this page with friends

வேல்ஸ் நாட்டை சார்ந்த மேரி ஜோன்ஸ்கோ கொள்ளை ஆசை. சொந்தமாக ஒரு வேதாகமம் வாங்க வேண்டும் என்று.

அந்நாட்டில் வேதாகமம் கிடைப்பது மிகவும் அரிது. அப்படி கிடைத்தாலும் ஏழைகள் அதை வாங்க முடியாது. விலையோ மிக அதிகம். மேரி ஜோன்ஸ் பரம ஏழை. அப்படியென்றால் வேதாகமத்தை எப்படி வாங்க முடியும்?

ஆறு ஆண்டுகள் கடந்தன. உள்ளத்தில் வாஞ்சை வளர வளர தான் சேமித்து வைத்திருந்த பணமும் உயர்ந்தது. ஆவலும் வளர்ந்து.

ஒரு நாள் மகிழ்ச்சி பொங்க துள்ளி குதித்தாள் மேரி ஜோன்ஸ். வேதாகமத்துக்கான பணம் சேர்ந்துவிட்டது. 25 மைல்கள் தூரத்தில் உள்ள ஒரு போதகரிடம் வேதாகமம் இருப்பதை அறிந்து அதிகாலமே உற்சாகத்துடன் தன் நடை பயணத்தை தொடங்கினாள்.

பெரும் மகிழ்ச்சியில் இடி விழுந்து போல் மேரிக்கு ஏமாற்றம் அங்கே காத்திருந்தது. #வேதாகமம் இல்லை என்ற பதிலை அவள் சற்றும் எதிர்பார்கவில்லை. தேம்பி, தேம்பி அழ ஆரம்பித்தாள். போதகரின் மனம் உடைந்தது.

வேதாகமத்துக்காக ஒரு சிறுமியின் வாஞ்சையும், அவளின் முயற்சியும் போதகரின் உள்ளத்தை அசைத்தது. தான் உபையோகப்படுத்துவதற்காக வைத்திருந்த அழகிய வேதாகமம் ஒன்றை எடுத்து வந்தார். மேரியின் கைகளில் கொடுத்தார்.

தன் கண்களையே நம்ப முடியாதவளாய் போதகரையே உற்று பார்த்தாள். அவள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஊரை நோக்கி ஓடி வந்தாள். உறவினரை அழைத்தாள். உற்சாகத்தால் நிறைந்தாள். வேதாகமத்தை உரக்க வாசித்தாள்.

மேரியின் வாஞ்சையும், ஆர்வமுமே சர்வதேச வேதாகம சங்கம் தோன்ற காரணமானது.

இறைவன் எனக்கு துணைபுரிந்தார்.
அவர் என் ஜெபத்தை கேட்டார்.

சிந்தனை: நம் கரத்தில் இருக்கும் வேதாகமத்தின் அருமையையும் மதிப்பையும் உணர்ந்து வேதத்தை வாசிக்க தேவன் அருள் புரிவாராக #Mary_Jones


Share this page with friends

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *