கர்த்தர் ஏன் கடற்கரைக்குச் சென்றார்?

Share this page with friends

கர்த்தர் ஏன் கடற்கரைக்குச் சென்றார்?

ஜெப ஆலயங்களின் கதவுகள் திறந்திருந்தபோது , அவர் ஏன் கடற்கரையில் இருந்த காலியான படவில் ஏறிப் போதகம்பண்ணினார்?


போதகம் பண்ணுவதற்கு மேடையோ, ஜனங்கள் அமர, பல வர்ண நாற்காலிகளோ மைக்கோ, ஸ்பீக்கரோ தேவையில்லை SPEAKER க்கு மனமிருந்தால் –  (ஜீவ) மார்க்கமுண்டு.

அன்றைய தினம் அந்தக் கடற்கரையில் கூட்டம் அதிகமாகிவிட்டது எனவே, கடற்கரையே கூடாரமாகி விட்டது.  காலியான படவு மேடையாகி விட்டது.
கடற்கரை ஊழியத்திற்கும் ஆற்றங்கரை ஊழியத்திற்கும் ஒருபோதும் கதவடைப்பு (Lock-down) இல்லை. கதவு இருந்தால்தானே அடைப்பதற்கு!


கடலைச் சுற்றி காம்பவுண்டு  சுவர் எழுப்பிக்கதவு போட யாரால் கூடும்?
உலகமெங்கும் கடற்கரை பரந்து விரிந்து காத்துக் கிடக்கும் போது, கண்டுன்னை அழைத்தக் கர்த்தர் உடனிருக்கும் போது பவுலையும் பர்னபாவையும் போல, ஒருவேளை அது ஆற்றங்கரையோரமாயிருந்தாலும் Bible Study நடத்தி, One To One ஊழியம் செய்து Each one Catch one என்ற Formula வை Apply பண்ணி Divine Supply யைப் பெறலாமே!


லீதியாள் என்ற ஒரு ஆத்துமாவின் இதயக் கதவைத் திறக்க ஆலயம் திறந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கர்த்தருக்கு இல்லை. அழைக்கப்பட்டோர் ஆயத்தமாயிருந்தால் திறந்தவெளி மைதானங்கள் கூட தேவாலயங்களாகலாம்.

பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ், ஜீவத்தண்ணீர் ஊழியங்கள்-மதுரை


Share this page with friends

You may also like...