About TCN

         


                  தமிழ் கிறிஸ்டியன் நெட்வொர் என்ற வலைதள சேவையானது கடந்த 2015 ம் ஆண்டு ஜனவரி 8 ம் தேதி பாஸ்டர். பெவிஸ்டன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அற்பமாக ஆரம்பிக்கப்பட்ட இச்சேவையானது தேவனுடைய கிருபையினால் மிக குறுகிய ஆண்டுகளில் 70 இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும், 166K க்கும் அதிகமான சந்தாதாரர்களையும் பெற்று இயங்கி வருகிறது. இந்த இணைய சேவையினை பாராட்டி YouTube நிறுவனமானது 2019 ம் ஆண்டு சில்வர் விருதினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

       TCN Media என சுருக்கமாக அழைக்கப்படும் இவ்வூடகம் வாயிலாக கிறிஸ்தவ வட்டார நடப்பு செய்திகள் உட்பட, கிறிஸ்தவம் சார்ந்த பல்வேறு தகவல்கள், நேர்க்காணல்கள், குறுஞ்செய்திகள், வரலாற்று நிகழ்வுகள், விஞ்ஞான ஆய்வு முடிவுகள், வேதாகம பாடங்கள், புதிய இசை மற்றும் பாடல்கள் என நேர்த்தியாக தினம் ஒன்று என்ற விகிதத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. 

    TCN Media சர்வ உலகிற்கும் நற்செய்தியை கொண்டு செல்லும் பணியினையும், இரட்சிக்கப்பட்டவர்களை பக்திவிருத்தி அடையச்செய்து வருகைக்கு ஆயத்தப்படுத்தும் பணியினையும் இவ்வூடகம் செய்து வருகிறது. 

      தனிநபரால் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவையானது இன்று வேரூன்றி, பல்வேறு கிளை பரப்பி, பல்வேறு ஊழியர்களின் ஒத்துழைப்போடு தேவ நாம மகிமைக்காக இயங்கி வருகிறது. தொடந்து இச்சேவை தொடரவும், பல கோடிகளுக்கு பயன்படவும் தயவாய் ஜெபித்துக்கொள்ளுங்கள். நன்றி