திருமணத்தோடு சம்பந்தமுடைய ஒரு சில விஷயங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

திருமணத்தோடு சம்பந்தமுடைய ஒரு சில விஷயங்களுக்காக ஜெபிக்க சொல்ல தோன்றியது, அவை:
1. திருமண வயது வந்தும் இன்னும் திருமணமாகாமல் கவலையோடிருக்கிற அநேக வாலிப பிள்ளைகளுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
2. தங்கள் வாழ்க்கையில் காதல் என்னும் இச்சையில் சாத்தானின் சூழ்ச்சியில் அகப்படாமல் கர்த்தரின் சித்தத்தின்படி நடக்கும் திருமணத்திற்காய் பொருமையோடு காத்திருக்கும் ஞானத்தையும் தெய்வ பயத்தையும் கொண்டிருக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.
3. அவர்களுக்காய் பெற்ற கடமையை செய்ய பாரத்தோடும் ஏக்கத்தோடும் இருக்கிற பெற்றோருக்காகவும் சகோதர சகோதரிகளுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்…..
4. (ஓடிப்போய்) காதல் திருமணம் செய்துக்கொண்ட தங்களின் பிள்ளைகளுக்காய் ஏங்கும் பெற்றோருக்காய் ஜெபித்துக்கொள்ளுங்கள்
5. (ஓடிப்போய்) காதல் திருமணம் செய்துக்கொண்டவர்கள் தங்கள் பெற்றோரின் மற்றும் தங்கள்வாழ்ககை துணையின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் பாசத்தை உணர்ந்து தெய்வ பக்தியின் உணர்வடைந்து, தேவனிடத்திலும் பெற்றோரிடத்திலும் உண்மையான மனந்திரும்பதலோடு ‘மன்னிப்பு கேட்டு’ தேவனிடத்திலும் பெற்றோரிடத்திலும் ஐக்கியமாக ஜெபித்துக்கொள்ளுங்கள்….
6. தங்கள் பிள்ளைகள் ‘காதல்’ என்கிற விபச்சார வலையில் விழாமலிருக்கத்தக்க ஞானமாய் தங்கள் பிள்ளைகளை வளர்க்க தேவையான ஞானத்தை கர்த்தரரிடத்திலிருந்து எல்லா பெற்றோரும் பெற்றுக்கொள்ளவும்…. ஒழுங்கான உடை உடுத்துவதையும் மற்றும் சபை கூடிவந்து ஆராதித்து வசனத்துக்கு செவிகொடுத்து கீழ்ப்படிந்து நடப்பதை வலியுருத்தவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்….
7. காதலை ஆதரிக்கும் கிறிஸ்தவ சபைகளும், ஊழியர்களும், கிறிஸ்தவர்களும் மனந்திரும்ப ஜெபித்துக்கொள்ளுங்கள்….
8. தெய்வ பக்தியாயிருந்து திருமணமாகியும் தங்கள் திருமண வாழ்க்கையில் சமாதானமில்லாமலிருக்கும் பிள்ளைகளுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்…..
10. சத்திய வசனத்தின்படி, பைபிள் போதனையின்படி மனைவிகள் தங்கள் கணவர்களுக்கு கீழ்ப்படிந்திருக்கவும், கணவர்கள் தங்கள் மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா கடமைகளையும் செய்யவும் ஜெபித்துக்கொள்ளுங்கள்….
11. “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” என்கிற வேத வசனத்தை தவறாக புரிந்துகொண்டு தங்கள் பெற்றோரை உதாசீனப்படுத்தியும், முதியோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறவர்கள் உணர்வடைந்து தங்கள் பெற்றோரையும் தங்கள் வாழ்க்கை துணையின் பெற்றோரையும் கனப்படுத்த ஜேபித்துக்கொள்ளுங்கள்….
12. தங்கள் மருமக்கள்மாரை தெய்வபயமில்லமல் அடிமைப்போல் நடத்துகிறவர்கள் மனம்மாற ஜேபித்துக்கொள்ளுங்கள்….
13. திருமணமாகி விவாகரத்து வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறவர்கள் “நம் நீதியுள்ள நியாயாதிபயாகிய தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து” உணர்வடைந்து மீண்டும் சேர்ந்து வாழ ஜேபித்துக்கொள்ளுங்கள்….
14. தங்கள் பிள்ளைகளுக்கு திருமணமாகாததற்கு காரணமாயிருக்கிற வரதட்சனை, ஜாதி வெறி, அழகு, தராதரம், படிப்பு, பெரிய சம்பளம், வெளிநாட்டு வரன் போன்ற காரியங்களை காட்டிலும் தெய்வபயமுள்ள பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் தருவது பெருக ஜேபித்துக்கொள்ளுங்கள்….
15. திருமணமாகி நீண்ட நாளாகியும் குழந்தை பாக்கியமில்லாதவர்கள்:
16. “சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தையும்…
17. விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றதையும்
(எபிரேயர் 11:11&12)
18. நினைத்து தங்கள் வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட விசுவாசத்தைக்கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏற்றகாலத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுக்கச் செய்வாரென்று விசுவாசித்து காத்திருக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்….
19. இச்சமூகத்தில் ‘பெண் குழந்தை வேண்டாம்’ என்கிற மனநிலை மாற ஜெபித்துக்கொள்ளுங்கள்….
20. தங்கள் பிள்ளைகள் வெளிநாட்டிலிருப்பதினால் வயதான காலத்தில் தனியாக தங்களின் வாழ்க்கையை கவலையோடு தனியாக கழித்துக்கொண்டிருக்கும் வயதான தம்பதிகள் ‘துணையாளர் இயேசு’ வை சார்ந்து வாழ ஜெபித்துக்கொள்ளுங்கள்…
கடைசியாக…..
21. உங்களின் எல்லா ஜெபங்களிலும்.. எங்கள் குடும்பத்துக்காகவும் ஊழியங்களுக்காகவும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் (மாத்திரம்) ஜெபித்துக்கொள்ளுங்கள்….
எங்களுக்காய் ஜெபிக்கும் அனைவருக்கும்…. நன்றி.