வேதபண்டிதர் மா. ஜான்ராஜ் அவர்களது வாழ்வு பற்றிய அரிய தகவல்கள்

Pastor M. Johnraj, Carmel Pentecostal Church

சிவகாசி பட்டணத்தை மையமாக கொண்டு அற்புதமான ஊழியத்தை செய்த பாஸ்டர் மா. ஜான்ராஜ் அவர்கள் 21.7.2020 அன்று மாலை 7 மணியளவில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்.

பாஸ்டர் மா. ஜான்ராஜ் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர். என்பது (80) புத்தகங்களுக்கு மேல் எழுதி கிறிஸ்தவ உலகிற்கு படைத்தவர். மிகச் சிறந்த பண்பாளர். அவர் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. நல்ல ஒரு ஆவிக்குரிய தலைவர். ஏராளம் ஊழியர்களை உருவாக்கியவர். 32 கிளை சபைகளை ஆரம்பித்தவர். பாஸ்டர் மா. ஜான்ராஜ் அவரது மறைவு கிறிஸ்தவ சபைகளுக்கு மிகப்பெரிய இழப்பு.

அவருடைய புத்தகங்களினால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கணக்கற்றோர். அவருடைய பிரசங்கங்கள் வேதவசனத்தை கண்களுக்கு முன்பு படம் பிடித்து காட்டி என்றும் மனதில் நிலைத்து நிற்க செய்யும்.

1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது கா்மேல் பெந்தேகொஸ்தே ஆலயம். ஆராதிக்க சொந்த இடம் இல்லாத நேரத்தில் சிறிய கூரை வீட்டில் தான் இந்த ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளக்கு பின்பு 1988 ஆண்டு ஆலயத்திற்கு என்று சொந்த இடம் வாங்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு சிவகாசி மாவட்டம் திருத்தங்களில் முழுமையாக ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 25 அடி நீளம் 25 அடி அகலம் கொண்ட இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஊழியம் இன்று பல லட்சம் ஆத்துமாக்களுக்கு  ஆசிர்வாதமாய் உள்ளது.

புத்தக ஊழியம், மீடியா ஊழியம் உட்பட வேதாகமக் கல்லூரி ஊழியமும் நிறுவப்பட்டது. இந்த வேதாகம (Carmel Bible College, Sivakasi) கல்லூரியின் மூலமாய் வேதத்தை கற்றவர்களும் உருவாக்கப்பட்ட ஊழியர்களும் ஏராளமுண்டு. பாஸ்டர் மா. ஜான்ராஜ் அவர்களது ஊழியத்திற்கு தேவன் அடித்தளமாக கொடுத்த வாக்குத்தத்தம் “சின்னவன் ஆயிரமும் சிறியவன் பலத்த ஜாதியுமாவான்” என்பதாகும்.

இந்த வாக்குதத்தத்தை அவர் வாழ்நாளில் அவர் கண் முன்பாகவே தேவன் நிறைவேற்றி காட்டினார். போதகர் அவர்கள் தன் வாழ்வின் இறுதிவரை கிறிஸ்துவுக்காக வாழ்ந்தவர். மரிக்கும் சில நாட்களுக்கு முன்பு “விசுவாச கப்பல்” என்ற தலைப்பில் அற்புதமான தேவசெய்தியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும அக்கரைக்க யாத்திரை செய்யும்..” என்ற பாடலை தொடர்ந்து பல முறை தனது இறுதி பிரசங்கத்தில் பாடினார்கள். தான் கற்ற வேதாகம உபதேசத்தில் மிக உறுதியாக நின்றவர். சாட்சியுள்ள வாழ்க்கையோடு வாழ்ந்து, அனேக ஊழியர்களையும் விசுவாசிகளையும் உருவாக்கிய அற்புதமான தேவ மனிதர் இன்று கர்த்தருடைய ராஜ்ஜியத்தில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்.

“நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை, புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.” (ஏசாயா 57:1) இந்த வசனத்தை சிந்திப்போம். நாம் வாழும் காலம் கடைசி காலம்.

இந்தியாவின் தூண்களாக இருந்த மாபெரும் ஊழியர்கள் தங்கள் ஓட்டத்தை முடித்த கர்த்தருடைய ராஜ்யத்துக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள்.

அன்பு கர்த்தருடைய பிள்ளைகளே, அன்பு போதகர் வாழ்வில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை அப்பியாசப்படுத்துவோம். இயேசு வருகிறார் என்கிற சத்தம் நம் காதுகளில் எந்நேரமும் கேட்க நாம் ஆயத்தப்படுவோமாக.

உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் தேவ ஊழியர்களுக்காக, சுகத்துக்காக ஜெபித்துக்கொள்ளுவோம்.

போதகரின் அற்புத வாழ்வை பற்றிய தகவல்களையும், அவரது ஆரம்பகால அரிய புகைப்படங்களை காண கீழ்கண்ட வீடியோவினை காணவும்.

பாஸ்டர் ஜான் ராஜ் அவர்களது கடைசி நிமிடங்கள் எப்படி இருந்தது பற்றி போதகரின் மகன் மிக தெளிவான புரிதலை ஏற்படுத்தியுள்ளா். வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

அன்பானவர்களே, உங்களது கட்டுரைகள், பிரசங்க குறிப்புகள், காணொளி பதிவுகளை இங்கே பதிவிடலாம். பக்திவிருத்திக்கேதுவானவைகள் விரைவில் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும். சாதாரண சாமானியரின் திறமைகளும் உலக அரங்கில் பாரபட்சம்பாராது முன்னிருத்தப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில் இப்பணியை நாங்கள் செய்து வருகிறோம். நன்றி

Share this page with friends