சிம்சோனின் வீழ்ச்சிக்கு காரணங்கள்

சிம்சோனின் வீழ்ச்சிக்கு காரணங்கள் (நியாதிபதிகள் 13,14,15,16)
1) சொந்த பெலத்தை நம்பினான்
2) கடந்த கால வெற்றிகளை நம்பினான் (சிங்கத்தை துண்டு துண்டாக கிழித்ததையும், பெலிஸ்தர்களால் கட்டப்பட்டு அதை எளிதாக அறுத்து கொண்டதை)
3) அவனுடைய பெலன் கர்த்தரால் கொடுக்கபட்டது என்பதை மறந்தான்.
4) நான் என்ற அகங்காரத்தினாலும், பெருமையினாலும் அவன் வழி நடத்தப்பட்டான்
5) தன்னை யாரும் தோற்கடிக்க முடியாது என்று அவன் தன்னை பற்றிக் கருதினான்.
6) அவன் சுயக் கட்டுப்பாடு இல்லாதவனாய் இருந்தான்
7) அவன் தனது கண்களால் நடத்தப்பட்டான். தனது கண்களை கட்டுப்பாடின்றி அலைய விட்டான்
8) தன்னுடைய உணர்ச்சிகளுக்கு இரையாகிப் போனான்
9) அவனது வல்லமையையும், அபிஷேகத்தையும் இழந்து போனான்
10) அவன் தன்னை குறித்து கவனமாயிராதபடியால் அவன் விழுந்து போனான்
11) அழைப்பின் நோக்கத்தை அசட்டை செய்கிறவனாக ஆரம்பம் முதல் காணப்படுகிறான்
12) ஒரு விசை மாத்திரம் என்னை நினைத்தருளும் என்று சொன்ன சிமியோன் தானும் தேவனை நினைத்து வாழ்ந்திருந்தால் இப்படிப்பட்ட பரிதாபமான முடிவு நேர்ந்திருக்காது.
13) கர்த்தர் தன்னை விட்டு விலகினதை அறியவில்லை (பாவத்தில் வாழ்ந்து கொண்டு கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்று நினைத்தான்)
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டு இருக்கிறது – 1 கொரி 10:11