எந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர்

எந்த மனுஷனையும் பிரகாசிக்கச் செய்கிறவர் இந்த மனுஷனை
விட்டுவிடுவாரா?
அழைத்தபோது அல்லத்தட்டாமல் ஆபிரகாமைப் போல
கீழ்ப்படிந்து, லோத்து போல அப்படியல்ல ஆண்டவரே என்று
சொல்லாமல், போகுமிடம் இன்னதென்று தெரியாமல் புறப்பட்டுப் போன ஆபிரகாமை அவர் ஆசீர்வதித்து தேராகுவின் மகனான ஆபிரகாமைப் பிரகாசிக்கச் செய்யவில்லையா?
பேரம் பேசின லோத்து சோரம் போன சமாச்சாரம் தெரியாதா?
ஈசாக்கு தன் தகப்பனைப் போல எகிப்துக்குப் போக நினைத்தபோது
தடுத்து நிறுத்தி.. எகிப்தை எட்டிப் பார்க்காதே, நான் சொல்லும் தேசத்தில் குடியியிரு என்று கட்டளையிட்ட கர்த்தருக்கு நூற்றுக்கு நூறு கீழ்ப்படிந்த உத்தம புருஷனான ஈசாக்கை நூறு மடங்கு ஆசீர்வதித்து பஞ்ச காலத்திலும் பிரகாசிக்கச் செய்த கர்த்தர் பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்
எதற்காக?
இலக்கிய சேவையைப் பாராட்டி ஞாயிறு அன்று தர இருந்த உலக விருதை உதறித் தள்ளி அது கர்த்தருடைய நாள் அந்த நாளில் என் சொந்தக் காரியத்தை அல்ல, ஆலயத்தில் அமர்ந்து கர்த்தரின் கிருபைகளையே சிந்தித்துக் கொண்டருப்பேன் என்று உலக விருதை அல்லத்தட்டிய அன்பு சகோதரர் பாஸ்டர் பெவிஸ்டன் அவர்களுக்கு, அமெரிக்க தேசத்திலிருந்து வந்து 12.10.2020 ஆம் நாளில் திங்கள் அன்று பாராட்டு பத்திரத்தைப் பரிசளித்து கனப்படுத்தி, இன்னமும் எழும்பி எனக்காகப் பிரகாசி என்று சொல்லாமல் சொன்னவருக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாதே!
என்னைக் கனம்பண்ணுகிறவனை நான் கனம் பண்ணுவேன் எனறு வாக்களித்த கர்த்தருக்கு நன்றி நன்றி நன்றி
எழுதியவர்
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை-14
இலக்கிய சேவை பிரிவு
TCN Media, India