வீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு சில டிப்ஸ்!
வீடுகளில் இருக்கும் விசுவாசிகளுக்கு!
இந்த covid 19 யினால் வீடுகளில் பலதரப்பட்ட நிலைகளில் இருப்பீர்கள். சிலர் இது என்னவாகும் எப்படி முடியும், இது நம்மை தாக்குமோ என்கிற பயம் மற்றும் சந்தேகத்தோடு கூட இருக்கலாம். சிலர் என்ன நடந்தால் எனக்கு என்ன என்று கூட இருக்கலாம். நாம் இந்த சுழலில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிதானித்து அறிய கர்த்தர் அருள் புறிவாராக!
A. சோம்பல் நம்மை தாக்காதபடி எச்சரிக்கை தேவை. சோம்பல் தேவை யில்லாத உறக்கத்தை கொண்டு வரும். எனவே சுறுசுறுப்பை விட்டு விடாதிருங்கள்.
B. தனியாக இருக்கும் போது இந்த சோம்பலின் ஆவி நம்மை குழப்பி பலவிதமான மாறுபாடான பயம் தரும் கவலை தரும் சந்தேகமான சிந்தைகளை கொண்டுவரும். எனவே வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துங்கள். பயனுள்ள காரியத்தில் நேரத்தை செலவிடுங்கள்.
C. பொழுது போக்கிறோம் என்று சொல்லி மொபைல் டிவி என்று அதிகமாக அவைகளில் மூழ்கி மனதை இன்னும் இறுக்கமாக வைக்க இடம் தரவேண்டாம். பயனுள்ள காரியத்தில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். ஆவிக்குரிய செய்திகள் கேட்கலாம், ஆவிக்குரிய புஸ்தகங்கள், மற்றும் மிஷனரி biography வாசிக்கலாம்.
D. அதிகாலையில் எழும்பி கர்த்தரை தேடும் பழக்கத்தை விட்டு விடாதீர்கள். அவரை தேடும் போது அவர் நமக்கு தென்படுவார். அவரது பிரசன்னம் நம்மை நம்பிக்கைக்கு நேரே கொண்டு செல்லும். அவரை துதியுங்கள். சிலுவையை அதிகமாக தியானியுங்கள். நம்பிக்கை பிறக்கும். தேவ பெலேன் கிடைக்கும். அவர் தளும்புகளால் சுகம் உண்டு என்று அவரில் உங்கள் நாளை ஆரம்பியுங்கள். சபை ஊழியர்கள், சபை விசுவாசிகள், ஊழயங்கள், மற்றும் தேசத்திற்காக ஜெபியுங்கள்.
E. வேத வசன தியானத்தை விட்டு விடாதீர்கள். வசனம் தான் ஆத்துமாவின் போஜனம். கிறிஸ்துவின் வார்த்தையில் தான் பிழைப்பு உண்டு. இவைகள் தானாக உருவாகி வந்தால் நீங்கள் தான் பாக்கியவான்கள்.
F. வீடுகளில் சும்மா இருக்கிறோம் என்று வாலிபர்கள் மொபைலில் நோண்டி கொண்டு இருக்காதீர்கள். அதன் மூலம் பாவத்தை விட்டு ஓயாத கண்கள், இச்சையை துண்டும் ஆபாசம், ஜோக் வென்று பிறரை கிண்டலடிக்கும் சாராம்சம் இல்லாத வேலை, chatting, மற்றும் தேவை யில்லாத் உரையாடல்கள் தவிர்த்து ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். ஜெபத்துடன் தேவ நோக்கத்தை கண்டு பிடியுங்கள். உங்கள் அந்தரங்க வாழ்வை பற்றி கவனமாக இருங்கள். அங்குதான் உங்கள் மெய்யான சுபாவம் வெளிப்படும்.
G. வாலிப பெண்கள் உங்கள் அம்மாவோடு இணைந்து சமையல் கற்று கொள்ளுங்கள். இருக்கிற உணவு வகைகள், வீட்டு பராமரிப்பு, சுத்தம் செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுங்கள். அம்மாவோடு அனுபவம் கேளுங்கள். படியுங்கள். கடந்து வந்த பாதைகளை கேட்டு வாழ்வின் பக்குவத்தை அடையுங்கள். குடும்ப வழைக்கையை குறித்த அறிவை கேட்டு வாங்குங்கள்.
H. வாலிப ஆண்கள் தோட்டம் துறவு இருந்தால் நமக்கு நாமே என்று ஏதாவது பயனுள்ள வேலையை செய்யுங்கள். உங்கள் அப்பா தொழில் செய்கிறவராக இருந்தால் தொழிலை கற்று புதிய ஆக்கப்பூர்வமான மாற்றங்களை தொழிலில் கொண்டு வாருங்கள். ஆன்லைன் புதிய வேலை வாய்ப்புகளை தேடி கண்டு பிடியுங்கள். Craft மூலம் எதாவது செய்யுங்கள். வெட்டியாக இருக்காதிருங்கள். சிருஸ்டிகரை நினைத்து உங்கள் படிப்பு அல்லது நிலைக்கு ஏற்றபடி எதாவது முயற்சி எடுங்கள். இன்னும் தரமான கண்டுபிடிப்புகள் மற்றும் தரமான செயல்கழுக்கு உலகம் இன்னும் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது. வேலை வாய்ப்பு அற்ற நேரத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளுங்கள்.
I. Online class மற்றும் ஆன்லைன் வேலை பார்ப்பவர்கள் என்றும் போல மற்ற நாளுகளில் செய்வது போல take path செய்து fresh யாக கற்று கொள்ள போகிறோம், வேலை செய்ய போகிறோம் என்கிற எதிர்பார்ப்பில் (வீடுகளில் இருக்கிறோம் என்று சமரசம் செய்யாமல்) உற்சாகமாக இருங்கள். ஏனோ தானோ என்று செயல் படுவது நமது personality yai பாதித்து விடும்.
J. உங்கள் சபை ஊழியங்கள் உங்களுக்கு நினைவில் வரட்டும். உங்களை பார்பதற்கு யாரும் இல்லையென்று அசதியாக இராதேயுங்கள். பிரதான ஆசாரியர் கவனிக்கிறார் என்று எண்ணுங்கள். சபை கூடி வரும் நாட்களில் எப்படி ஆயத்தம் ஆகி இருந்தீர்களோ அப்படி ஆயத்தம் ஆகி conference calls மற்றும் you tube மூலம் அவர்கள் உங்களை தொடர்பு படும் போது அந்த செய்திகளை நன்கு கவனியுங்கள். யாரும் பார்க்க வில்லை என்று like மட்டும் போட்டு விட்டு வேலை முடிந்தது என்று போய் விடாதிருங்கள். முழுவதும் கவனியுங்கள். பிரபலமான ஊழியர்கள் ஊழியத்தை முன்னிறுத்தி உங்கள் ஊழியரை அற்பமாக எண்ணதிருங்கள். உங்கள் போதகர் மூலம் தான் கர்த்தர் உங்களோடு முதலில் இடைபடமுடியும். அவர்கள் தான் உங்களுக்கு உத்தரவாதம் என்பதை உணருங்கள். அதற்காக பிறரது செய்தியை கேட்க வேண்டாம் என்று அல்ல. உங்கள் சபையோடு உங்கள் போதகரோடு உள்ள தொடர்பை நஷ்ட படுத்தி அந்த நேரத்தை விட்டு விட்டு இன்னொரு செய்தியின் மேல் நாட்டம் காட்டாதிருங்கள். லோத்தை கவனித்து பாருங்கள் சோதோம் அவனுக்கு எதேன் தோட்டம் போல இருந்ததாம். ஆனால் ஆபிரகாம் வானந்திரத்தில் இருந்தது போல தான் இருந்தான் முடிவு ஆசீர்வாதமாக இருந்தது. இந்த லாக் down yin முடிவு நன்றாக அமைய உங்கள் போதகரின் செய்தி HD quality இல்லாவிட்டாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்று கொள்ள உங்கள் இருதயம் நல்ல quality யாக இருக்கட்டும். உங்கள் போதகரை பாராட்டுங்கள். குறை நிறைவுகளை சுட்டி காட்டுங்கள். அவரது செய்தியை தேவையின் அடிப்படையில் பகருங்கள்.
K. வீடுகளில் இருக்கிறோம் எண்கிறதினால் நோய் தொற்றும் என்று பிறர் மேல் அக்கறையற்றவர்கள் போல இராதபடி திரணிகேற்றபடி உதவி செய்யுங்கள். பிறர் கேட்கட்டும் என்று இராதபடி சபையில் தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். உங்கள் போதகர்களை விசாரியுங்கள். உங்கள் போதகரிடம் கேளுங்கள் யாராவது தேவையில் இருக்கிறார்களா என்று அதன் அடிப்படையில் விசாரித்து உதவி செய்யுஙகள். சுவிசேஷம் அறிவிக்க இதை ஒரு சந்தர்ப்பமாக கூட கருதலாம்.
L. வேலை இல்லாமல் பொருளாதார நெருக்கடியை அதிகமாக சந்திக்கிற படியால் அனைவரும் கர்த்தரை சார்ந்து ஜெபித்து காத்திருங்கள். இந்த virusai அசட்டையாக எண்ணி ஓவர் confidence aaka இருந்து விடாதீர்கள். தேவன் நமக்கு அடைக்கலம் என்று நம்புங்கள் அதே நேரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். அவசியமில்லாமல் பிறர் வீடுகளில் பொகாதிருங்கள். போதகர் உங்களை விசாரிக்க வரவில்லை என்று கசந்து கொள்ளாதிருங்கள். கர்த்தர் நிச்சயம் உங்களை விசாரிப்பார். உங்கள் போதகர்களிடம் உங்கள் கடினமான பொருளாதார சூழ்நிலைகள் இருந்தால் சொல்லுங்கள். அவர்கள் தங்களால் இயன்றதை செய்வார்கள். எந்த சூழ்நிலைகளிலும் கர்த்தர் தான் நமது நம்பிக்கை அவரை நம்புங்கள். நேரம் அதிகமாக இருப்பதால் ஜெபத்துற்கு முக்கியத்துவம் கொடுங்கள். வேத வசனம் தியாணியுங்கள். அவரை போல மாறுங்கள். அவர் வருகிறார்.
நன்றி: செலின்.