velankanni festival

வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்

Standard Operating Procedures

1) தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து (Containment Zone) வருபவர்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு வருபவர்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.

2) 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள் (Comorbidities), கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் திருக்கோயிலுக்கு வருகை புரிவதை தவிர்க்கும் அறிவுரைகளை திருக்கோயில் நிர்வாகம் வழங்க வேண்டும்

3) ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொள்ளும் விதமாக கை குலுக்குதல் போன்ற உடல் ரீதியான தொடர்பை தவிர்க்க வேண்டும்

4) பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்

5) திருக்கோயில் நுழைவுவாயிலில் தரமான கிருமி நாசினி கண்டிப்பாக வைத்து அனைத்து பக்தர்களுக்கும் கொடுத்து கைகளை சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

6) திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இருமும் போதும் தும்மும் போதும் பயன்படுத்தும் கைக்குட்டை / திசுத்தாள் ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்

7) அங்கீகாரம் பெற்ற பொது சுகாதார அமைப்பு (மாவட்ட RRT / சிகிச்சை மருத்துவர்) மூலம் நோய் தொற்று அபாய கணக்கீடு (Risk assessment) நடத்தப்பட வேண்டும்

அதனடிப்படையில் நோயாளியை நிர்வகிப்பது, தொடர்பு, நோய் தொற்று நீக்குவதற்கான தேவைகள் ஆகியவைகள் குறித்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

8) பக்தர்கள் எச்சில் உமிழ்தல் தடை செய்ய வேண்டும் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

9) பக்தர்கள் கால்களை நீரில் சுத்தம் செய்து பின் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு தான் திருக்கோயில் உள்ளே நுழைய வேண்டும். பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்புதான் திருக்கோயில் உள்ளே நுழைய வேண்டும். நோய் அறிகுறி இல்லாத பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

10) திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கோவிட்-19 தொற்று நோய் பரவலைத் தடுக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள்/ சுவரொட்டிகள் (Posters/ Standees) / துண்டு பிரசுரங்கள் வழங்கவும் ஒளி, ஒலி பதிவுகளை இடைவிடாமல் ஒளிபரப்ப வேண்டும்

11) திருக்கோயில் வெளிப்புறம் மற்றும் வாகன நிறுத்துமிடத்திலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க பக்தர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்

12) பக்தர்கள் அணிந்து வரும் காலணிகளை காலணி பாதுகாப்பு இடத்தில் பக்தர்களே சுயமாக வைத்து திரும்ப அணிந்து செல்ல வேண்டும். அவ்விடத்திலும் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்

13) திருக்கோயில் நுழைவு வாயில் முதல் பிரகாரங்கள், சன்னதிகள் ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் செல்லும் வழிகளிலும், க்யூ வரிசையில் சமூக இடைவெளியை பராமரிக்க தரையில் வட்டங்கள் வரைய வேண்டும்

14) திருகோயிலுக்குள் நுழையவும் வெளியேறவும் ஒன்றுக்கு மேற்பட்ட வாயில்கள் இருப்பின் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஒரு வாயிலில் இரு வழிகள் அமைத்து அதில் ஒன்றில் உள்ளே சென்று அடுத்த வழியில் வெளியே செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதர வாயில்களைப் பூட்டி வைக்க வேண்டும் சுவாமி சிலைகளை தொடுதல் கூடாது

15) திருக்கோவில்களில் நடைபெறும் உற்சவங்களின்போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது மிகக் குறைந்த திருக்கோயில் பணியாளர்களுடன் சமூக இடைவெளி மற்றும் இதர பிற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்

16) நோய் தொற்று பரவுவதற்கான தீவிர ஆபத்து இருப்பதை கருத்தில் கொண்டு திருக்கோயிலில் பதிவு செய்யப்பட்ட பக்தி இசை, பக்தி பாடல்கள் ஒலிக்க விட வேண்டும் பஜனை குழு, பக்தி இசை குழு ஆகியவற்றை அனுமதிக்கக் கூடாது

17) அர்ச்சகர்கள் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களை தொட்டு குங்குமம் / மஞ்சள் / விபூதி தீர்த்தம் / பூ மற்றும் இதர பிரசாதங்கள் வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் விபூதி குங்குமம் பாக்கெட்டுகளில் வழங்க வேண்டும். சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

18) பக்தர்கள் வழிபாடு செய்ய பொதுவான தரை விரிப்புகளை பயன்படுத்தக் கூடாது. அவர்கள் தங்களுடன் கொண்டு வரும் துணிகள் அல்லது விரிப்புகளை திரும்ப கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

19) திருமடப்பள்ளி / அன்னதானக்கூடங்களில் பணி செய்யும் பணியாளர்கள் உணவு தயார் செய்யும் போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

20) திருக்கோயில் தரைப்பகுதி நாள்தோறும் பலமுறை தூய்மை செய்யப்பட வேண்டும் பக்தர்கள் விட்டுச்செல்கின்ற முகக்கவசம், கையுறைகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்

21) திருக்கோயில் வளாகத்திற்குள் நோய் தொற்று இருப்பதற்கான சந்தேகத்திற்குரிய அல்லது நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் இருந்தால்

அ) மேற்படி நபர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்

ஆ) மேற்படி நபர்களுக்கு மருத்துவர் ஆய்வு செய்யும் வரை முககவசம் அளிக்க வேண்டும் இ) அத்தகைய நபர்கள் இருப்பதாக தெரிய வந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு தொலைபேசியில் தெரிவிக்க வேண்டும் அல்லது மத்திய மாநில அரசுகளில் உதவி மையத்திற்கு தெரிவிக்க வேண்டும்

இ) அங்கீகாரம் பெற்ற பொது சுகாதார அமைப்பு (மாவட்ட RRT / சிகிச்சை மருத்துவர்) மூலம் நோய் தொற்று அபாய கணக்கீடு (Risk assessment) நடத்தப்பட வேண்டும் அதனடிப்படையில் நோயாளியை நிர்வகிப்பது, தொடர்பு, நோய் தொற்று நீக்குவதற்கான தேவைகள் ஆகியவைகள் குறித்து மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் நோய் தொற்று பாசிட்டிவ் உள்ள நபர் வளாகத்தில் இருப்பது அறிய வந்தால் வளாகம் முழுவதும் நோய் தொற்று நீக்கம் செய்ய வேண்டும்

22) திருக்கோயில்களில் குளிர்சாதனக் கருவிகள் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வெப்பநிலை 24-30 டிகிரி இருக்கும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒப்பு ஈரப்பதம் (Relative humidity) 40-70%, தூய்மையான காற்றினை பெற்றுத் தருதல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் போதுமான அளவு மாற்றுக் காற்றோட்ட வசதி (Cross ventilation) செய்து தரப்பட வேண்டும்

23) சிசிடிவி கேமராக்கள் முடிந்தவரை பொருத்தப்பட வேண்டும்

24) அரசாங்க விதிமுறைகளை பின்பற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கோவிட்-19 பாதுகாப்புக் குழு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

25) 100 ச.மீ அல்லது 1075 சதுர அடிக்கு 20 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்படக்கூடாது

26) பக்தர்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்கக் கூடாது பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறும்போது பக்தர்களை (உபயதாரர்கள் உட்பட) உள்ளே உட்கார்ந்து பார்வையிட அனுமதிக்க கூடாது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமே வரும்பட்சத்தில், தங்கும் விடுதிகள் மற்றும் அறைகள் ஒதுக்கப்படக் கூடாது

27) திருக்கோயில் உட்புறம் மற்றும் சுற்றுப்பிரகாரங்களில், 1% சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தெளிக்கப்பட வேண்டும்

28) பக்தர்கள் திருக்குளத்திற்கு செல்ல அனுமதிக்கக்கூடாது

29) திருக்கோயில் பிரசாதக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை அங்கேயே உண்ணாமல், பொட்டலங்களாக எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அங்கு செல்வதற்கு தனி வரிசை அமைப்பு சமூக இடைவெளியுடன் இருக்குமாறு அமைக்க வேண்டும்

30) திருக்கோயில்களில் திருமணங்கள் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். ஒரு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் ஒரு திருமணம் என்ற முறையில் 50 நபர்களுக்கு மேற்படாமல் அனுமதித்து சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்

Share this page with friends