• Monday 9 December, 2024 10:32 PM
  • Advertize
  • Aarudhal FM

இவரே தேவனுடைய குமாரன்

“யோவான் சுவிசேஷம்” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்த ஒரு சாட்சி புத்தகம் (யோ21:24). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் உண்மையை சாட்சி கொடுத்து நிலைநிறுத்துவது அவசியமாக இருந்தது (யோ 8:17,18). யோவான் சுவிசேஷத்தில் மட்டுமே “சாட்சி” என்ற வார்த்தை சுமார் 45க்கும் அதிகமான முறை வருகிறது. மட்டுமல்ல, யோவான் சுவிசேஷத்திலே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்த 7 வித சாட்சிகளை காண முடியும். அவ்விதம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து சாட்சியாக அறிவிக்கும்படி வந்தவர்தான் யோவன் ஸ்நானகன் (யோ 1:7, 3:26, 5:33). இயேசு கிறிஸ்துவை குறித்து பலவிதங்களிலே அவர் சாட்சி கொடுத்தார் (யோ1:7, 29, 34). அதிலே ஒன்றுதான் “இவரே தேவனுடைய குமாரன்” என்பதாகும் (யோ 1:34).

இவரே தேவனுடைய குமாரன் ஏனென்றால்…

1. முன்னிருந்தவர். 1:15 நித்தியர்

2. மேன்மையுள்ளவர். 1:15 உன்னத்திலிருந்து வருகிறவர் (3:31)

3. பரிபூரணர். 1:16 தேவத்துவத்தின் பூரணமெல்லாம் அவருக்குள் வாசமாயிருக்கிறது (கொலோ 2:9, 1:9)

4. கிருபையையும் சத்தியத்தையும் அருளினவர். 1:17 நியாயப்பிரமாணம் பாவத்தை சுடிகாட்டும், ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையாய் நமது பாவத்தை மன்னித்து, சத்தியத்தின்படி நமக்காக சிலுவையில் மரிக்கும்படி வந்தார் (1:14).

5. தேவனை வெளிப்படுத்தின ஒரேபேறான குமாரன். 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.

6. நாம்  அறியாதிருக்கிற ஒருவர். 1:26 இன்றைக்கும் உலகம் அவர் யாரென்று அறியாது அவரை புறக்கணிக்கிறது. அவரே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும்படி வெளிப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி (1:29, 36).

7. ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர். 1:33 தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு பரிசுத்த ஆவியை தந்து (யோ7:39), தம்மை விசுவாசியாதவர்களை நித்திய நரக அக்கினியினால் நியாயந்தீர்ப்பார் (யோ 3:36).

Thanks to Vivekananth