வளைகுடாநாட்டில்கார்பென்டர், பெயின்டர்களுக்குவேலை: சென்னையில் 19-ம்தேதிநேர்காணல்
சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் மா.லதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்ற கார்பென்டர், ஸ்டீல் பிக்ஸர், ஹெல்பர், மேசான், அலுமினியம் பேப்ரிகேட்டர், டக்ட்மேன், பர்னிச்சர் பெயின்டர், பர்னிச்சர் கார்பென்டர், பிளம்பர், ஏசி டெக்னீசியன் ஆகிய பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது 40-க்குள் இருக்க வேண்டும்.
ஊதியத்துடன் உணவு, விசா, தங்கும் வசதி ஆகியவையும் வழங்கப்படும். இப்பணிகளுக்கான நேர்காணல் ஜூலை19-ம் தேதி (வெள்ளிக்கிழமை)அன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டி தொழிற்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள (தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகில்) அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும்.
நேர்காணலுக்கு வருவோர் தங்கள் சான்றிதழ்கள் (பயோடேட்டா, பாஸ்போர்ட் ஒரிஜினல் மற்றும் நகல்),ஆதார் நகல், போட்டோ ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் கூடுதல் விவரங்களுக்கு 044-22505886, 22502267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். (வாட்ஸ் அப் எண் 95662-39685).
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு செல்வோர் வேலை கிடைத்த பின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.