• Tuesday 18 February, 2025 09:57 AM
  • Advertize
  • Aarudhal FM

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை கைதான ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டாஸ்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வரும் நிலையில், ஞானசேகரன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் குண்டர் சட்டம் அவர் மீது பாய்ந்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்த 2 மணி நேரத்தில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தியது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது.

சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொடர்ந்து இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் ஞானசேகரன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு 6.30 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தியது. இதில் லேப்டாப், ஹார்டு டிஸ்க், பட்டா கத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அளித்த பரிந்துரைப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே 3 முறை ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 4வது முறையாக ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நன்றி

மது பாட்டில்களில் எச்சரிக்கை வாசகங்கள், படங்கள் அச்சிட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் மது அருந்துவதால் குறைந்தது 7 வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசுக்கு அந்நாட்டின் தலைமை மருத்துவர் விவேக் மூர்த்தி அலுவலகம் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை அமெரிக்காவில் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

தமிழ்நாட்டில் இதே கருத்தை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ”ஆல்கஹால் மற்றும் சுகாதார நிலைமை குறித்த உலக அறிக்கை -2014” என்ற தலைப்பில் பத்தாண்டுகளுக்கு முன் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் மது குடிப்பதால் 60 வகை நோய்கள் தாக்கும் என இதுவரைக் கருதப்பட்டு வந்த நிலையில், இப்போது 200 வகை நோய்கள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் இழைநார் வளர்ச்சி (liver cirrhosis), சிலவகை புற்றுநோய்கள் ஏற்படுவதுடன், நிமோனியா, காசநோய் போன்றவையும் எளிதில் தொற்றுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போதிலிருந்தே மதுவின் இந்த தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆண்ட அரசுகள் இந்த யோசனையை கண்டுகொள்ளவில்லை.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் மதுவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படும் மது வகைகள் பல மடங்கு தரம் குறைந்தவை. மது குடிக்கும் அளவும் தமிழ்நாட்டில் மிகவும் அதிகம். இவற்றை வைத்துப்பார்க்கும்போது அமெரிக்காவில் மது அருந்துபவர்களுக்கு 10 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் என்றால், தமிழ்நாட்டில் மது அருந்துபவர்களுக்கு 2 ஆண்டுகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. அதனால் தான் தமிழ்நாட்டில் இத்தகைய விழிப்புணர்வு வாசகங்கள் மதுப்புட்டியில் அச்சிடப்பட வேண்டும் என்று பாமக வலியுறுத்துகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்தபோது தான் புகையிலைப் பொருள்கள் மீது எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் முறை கடுமையாக எதிர்ப்புகளையும் மீறி நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பயனாக புகையிலைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருப்பதுடன் புகையிலைப் பழக்கமும் கணிசமாக குறைந்துள்ளது. இதேபோல், மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

உலக அளவில் இப்போது தென்கொரியாவில் மட்டும் தான் மதுப்புட்டிகள் மீது எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடும் முறை நடைமுறையில் உள்ளது. அயர்லாந்து நாட்டிலும், அமெரிக்காவிலும் இத்தகைய முறை விரைவில் நடைமுறைக்கு வரவிருக்கிறது. மதுப்புட்டிகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. எனவே, மது குடித்தால் பல வகை புற்றுநோய்கள் உள்ளிட்ட 200 வகையான நோய்கள் ஏற்படும் என்ற வாசகத்தையும், எச்சரிக்கைப் படத்தையும் மதுப்புட்டிகளில் பரப்பில் 80% அளவுக்கு அச்சிடும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவர்கள் கவனத்திற்கு!

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பது ஆபத்து என ஆஸ்திரியாவின் டான்யூப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் அவர்கள் நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ரத்தத்தில் கலந்து பிபியை அதிகரிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்துவந்தால் இதய பிரச்னைகளுடன், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

05:00 PM, 6 ஆகஸ்ட் 2024

thanks to way2news

கர்ப்பிணியை நிர்வாணமாக்கி சாலையில் நடக்கவைத்த கொடூரம்; ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி

Aug 4, 2024, 5:29

ராஜஸ்தான் மாநிலம் நிக்லகோட்டா கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி 7 மாத கர்ப்பிணியை அவரது கணவர் உட்பட 17 பேர் நிர்வாணமாக்கி சாலையில் கட்டாயப்படுத்தி நடக்கவைத்து துன்புறுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து அப்பெண் காவல் நிலையதில் தன்னை துன்புறுத்தியவர்களுக்கு எதிராக புகார் அளித்தார்

கர்ப்பிணி பெண்ணின் புகார் குறித்து மாவட்ட காவல்துறை சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொண்டது. வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் பெண்ணை கொடுமை படுத்திய கணவர் உள்பட 17 நபர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் இதே வழக்கில் தொடர்புடைய 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் பெண்கள் தெய்வங்களுக்கு இணையாக மதிக்கப்பட்டனர். பழங்காலத்தில் வேதங்களில் பெண்கள் கௌரவிக்கப்படுகின்றனர். ஆனால், தற்போது கலியுகத்தில் பெண்கள் மீதான வன்முறையும், அட்டூழியங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதே போன்ற குற்றம் மணிப்பூரிலும் நடைபெற்றது. இத்தகைய குற்றங்கள் பெண்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக காயப்படுத்துகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

thanks to asianet news tamil

49 பெண்களுக்கு காதல் வலை, 5 முறை திருமணம்; காதல் மன்னனை பொறி வைத்து பிடித்த போலீஸ்

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால்(வயது 34). திருமணத்திற்கு வரன் தேடும் வலைதளங்களில் பதிவு செய்யும் விதவைகள், விவகாரத்தான பெண்களை குறி வைத்து சமால் தனது காதல் வலையை விரித்துள்ளார். இதில் மயங்கும் பெண்களிடம் தாம் ஒரு போலீஸ் அதிகாரி என்று அறிமுகமாகி பின்னர் அவர்களுடன் நட்பாக பழகத் தொடங்கி உள்ளார்.

5 திருமணம்

பின்னர் அவர்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவர்களிடம் பணத்தை பெற்றுள்ளார். ஒவ்வொரு பெண்ணிடமும் இதே முறையை பயன்படுத்திய சமால் இதில் 5 பெண்களை ஒரே நேரத்தில் திருமணமும் செய்துள்ளார். திருமணம் செய்து கொண்டு பணத்தை பெற்றுவிட்டு அவர்களுடன் வாழ மறுப்பு தெரிவித்ததாகக் கூறி இரு பெண்கள் தனித்தனியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

பொறி வைத்த போலீஸ்

ஒரே நபர் மீது இரு பெண்கள் வெவ்வேறு நேரங்களில் புகார் அளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சமாலை கைது செய்ய திட்டமிட்ட காவல் துறையினர், பெண் போலீஸ் அதிகாரியின் தகவல்களை வரன் பார்க்கும் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதனை பார்த்து தொடர்பு கொண்ட சமாலை லாவகமாக பேசி கைது செய்தனர். 

மோசடி

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காவல் துறையினரே ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தமாக 49 பெண்களுடன் சமால் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு பெண் சுமார் 8 லட்சம் வரையில் அவர் பெயரில் வங்கியில் தனிநபர் கடன் பெற்று சமாலுக்கு காரை பரிசாக வழங்கி உள்ளார். வேறொரு பெண் சுமார் 30 லட்சம் வரை தொழில் தொடங்குவதற்காக சமாலுக்கு வழங்கி உள்ளார். 

கைது – கைது செய்யப்பட்ட சமாலிடம் இருந்து ஒரு கார், விலை உயர்ந்த இருசக்கர வாகனம், 2.10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

thanks to asianet news tamil

ஆன்மீக நிகழ்ச்சியில் நிகழ்ந்த சோகம்; கோவில் சுவர் விழுந்து 9 சிறுவர்கள் பலி

 Aug 4, 2024, 4:37 PM

மத்திய பிரதேசம் மாநிலம், சாகர் மாவட்டத்தின், ஷாபூர் கிராமத்தில் ஹர்தௌல் பாபா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று காலை 8.30 மணியளவில் மத நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே மத்திய பிரதேசம் மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான கட்டிடங்கள் மழை நீரில் நனைந்து வலுவிழந்த நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வழிபாட்டு நிகழ்ச்சியின் போது கோவிலின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சம்பவத்தின் போது 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அப்பகுதியில் நின்று கொண்டிருந்ததால் சிறுவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் 9 சிறுவர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சில சிறுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் அண்மை காலமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

அண்மையில் ரேவா மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் அதே போன்ற விபத்தில் 9 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

thanks to asianet news tamil

சிறுவனின் உயிரை குடித்த ஆன்லைன் கேம்; தற்கொலைக்கு ப்ளூ பிரிண்ட் தயாரித்து விபரீத முடிவு

Aug 3, 2024, 1:08 PM

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், 15 வயது மாணவர் கடந்த 26ம் தேதி இரவு 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தற்கொலை காவல் துறைக்கு பெரும் சவாலாக அமைந்ததைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எப்படி தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம் என்ற விரிவான திட்ட அறிக்கையை அம்மாணவன் துள்ளியமாக படமாக வரைந்து வைத்திருந்ததைக் கண்டு காவல் துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் வரைபடத்துடன் சேர்ந்து ஒரு கேமிங் குறியீட்டில் எழுதப்பட்ட பல ஆவணங்களையும் அதிகாரிகள் கண்டு பிடித்தனர். சிறுவனின் தந்தை நைஜீரியாவில் வேலை செய்து வரும் நிலையில், சிறுவன் தனது தாய் மற்றும் தம்பியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இது தொடர்பாக சிறுவனின் தாய் கூறுகையில், தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்த சிறுவன் ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகினான்.

மாடியில் இருந்து கீழே குதிப்பதற்கு முதல் நாளில், நாள் முழுவதும் கத்தியுடன் கேம் விளையாடி வந்தான். பின்னர் நான் கண்டித்ததைத் தொடர்ந்து இரவின் சாப்பிட்டுவிட்டு மீண்டும் அறைக்குச் சென்று விளையாடத் தொடங்கினார். பின்னர் இரவில் வாட்ஸ்அப் குழுவில் சிறுவன் மாடியில் இருந்து குதித்துவிட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அதன் பின்னர் சிறுவனின் அறைக்கு சென்று பார்த்தபோது அவன் அங்கு இல்லை. மாறாக கீழே குதித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார். மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்படும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒரு கட்டத்திற்கு பின்னர் சிறுவர்களை அடிமையாக்கி அவர்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் தொடர்ந்து ஆன்லைன் கேம் விளையாடும் மாணவர்கள், சிறுவர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவர்களின் செயல்பாடுகளும் மாறுகின்றன. இதனிடையே அதிக நேரம் செல்போன்களை பயன்படுத்தும் சிறுவர்களை அவர்களின் பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

thanks to asianet news tamil

உடல் ஆரோக்கியத்திற்காக கிழங்கு சாப்பிட்ட இளைஞர் முகம் வீங்கி துடிதுடித்து பலி

Aug 3, 2024, 1:50 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தார்வழி பகுதியில் வசித்து வருகிறார். விவசாய பணிகளுக்கு டிராக்டர் ஓட்டி வரும் மணிகண்டனுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

இதனிடையே மாச்சம்பட்டு பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மணிகண்டன் தேங்காய் ஏற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விளைந்திருந்த காட்டு கருணைக் கிழங்கை மணிகண்டன் சாப்பிட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் அதனை சமைக்காமல் சாப்பிட வேண்டாம் என்று கூறியதற்கு, பச்சையாக சாப்பிட்டால் தான் கூடுதல் பலம் கிடைக்கும் என்று கூறிவிட்டு அந்த கிழங்கை சாப்பிட்டுள்ளார்.

அதனை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஒவ்வாமை ஏற்பட்டு அவரது முகம், உடலின் சில பகுதிகள் வீங்கத் தொடங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எந்தவித முன்னேற்றமும் தெரியாத நிலையில், உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

thanks to asianet news tamil

நாட்டிலேயே முதல்முறை; சேலத்தில் ஏலியனுக்கு கோவில் கட்டிய சித்தர் – இனி எல்லாமே ஏலியன்கள் தானாம்

 Aug 2, 2024, 11:53 PM

ஏலியன் கோவில் – சேலம் மாவட்டம் மல்லமுப்பம்பட்டி பகுதியில் சிவ கைலாய ஆலயத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு கடவுள் சிலைகள் ஒவ்வொரு சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளன. ராமர் போர் முடிந்து ஓய்வு பெற்ற இடம் என்று கருதப்படுவதால் ராமகவுண்டனூர் என்ற பெயர் பெற்றுள்ளதால் அம்பு எய்தும் கோலத்தில் இங்கு ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிது.

இந்த கோவிலை லோகநாதன் என்றசித்தர் பாக்கியா நடத்தி வருகிறார். நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத வகையில் ஏலியனை கடவுளாக பாவித்து அதன் சிலை பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாக்யா சித்தர் கூறுகையில், “உலகில் சிவன் படைத்த முதல் தெய்வம் ஏலியன் தான். உலகிலேயே ஏலியனின் முதல் சிலை இங்கு தான் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் சிலை அமைப்பதற்கு முன்பாக ஏலியனிடம் அனுமதி பெறப்பட்டதாம். ஏலியன் தெய்வங்கள் அனுமதி கொடுத்ததன் அடிப்படையிலேயே சிலை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இனிவரும் காலங்களில் ஏலியன்களின் வருகை அதிகமாக இருக்குமாம். அளவில்லாத சக்தியை கொண்ட ஏலியன்கள் உலகிற்கு எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள். அதற்காக தான் இந்த கோவிலை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

thanks to asianet news tamil

கோவையில் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கறிஞர்; பட்டப்பகலில் வெட்டி படுகொலை

Aug 2, 2024, 6:57 PM

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் கோவையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்யாவள்ளி கோவில்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதனிடையே பொள்ளாச்சி செல்வதற்காக இன்று காலை தனது காரில் புறப்பட்ட உதயகுமாரின் உடல் மைலேரிபாளையம் அருகே கோழிப்பண்ணை முன்பாக கிடந்தது.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஓடும் காரில் இருந்து உதயகுமார் கீழே தள்ளிவிடப்பட்டதாகவும், அவர் கீழே விழுந்தவுடன் மர்ம நபர்கள் அவரை உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. வழக்கறிஞரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது காரிலேயே தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த உதயகுமாரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

thanks to asianet news tamil