The Blessing and the Curse of Uzziah.

பிரசங்கம்: உசியாவின் ஆசீர்வாதமும் , சாபமும்.

The Blessing and the Curse of Uzziah.

பிரசங்க குறிப்பு: வாலிப செய்தி

அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லோரும் பதினாறு வயதான உசியாவை அழைத்து வந்து , அவனை அவன் தகப்பனாகிய அமித்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். 2 நாளா : 26 : 1

வேத ஆதாரம்: 2 நாளாக : 26 : 1 — 23.

வாலிப வயதில் உசியா ராஜா தேவனை கருத்தாய் தேடினான். கர்த்தரை அவனைப் போல எந்த ராஜாவும் அப்படி தேடவில்லை. கர்த்தரை தேடும்போது ஆசீர்வதிக்கப்பட்டான். தேவனைவிட்டு விலகி மேட்டிமையடைந்தான். கர்த்தருக்கு விரோத யாக் பொல்லாப்பை தேடிக்கொணாடான். அதனால் அவனுக்கு சாபம் வந்து வீழ்ச்சி அடைந்தான். இதை குறித்து இந்த வேதம் பகுதியில் பார்க்கலாம்.

வாலிப நாட்களில் கர்த்தரை கருத்தாய் தேடி அவரையே சார்ந்து கொள்ள வேண்டும். உசியாவின் வாழ்க்கை ஒரு எச்சரிப்பு.

1. உசியா 16ம் வயதில் கர்த்தரை தேடி , கர்த்தருக்கு பயந்து வாழ்ந்தவன். 2 நாளாக : 26 : 3 , 4

2. கர்த்தரை தேடினதால் உசியா காரியங்கள் செழிப்படைந்தது.
2 நாளாக : 26 : 5

3. தேவன் துணை நின்றதால் அவன் வெற்றி வாகை சூடினான்..
2 நாளாக : 26 : 7

4. உசியாவின் கீர்த்தி பரவியது. 2 நாளாக : 26 : 8

5. உசியாவுக்கு ஐசுவரியமும் , மகிமையும் உண்டாயிற்று.
2 நாளா : 26 : 10

உசியா கர்த்தரை விட்டு விலகியபோது

1) உசியாவின் இருதயம் மேட்டிமைக் கொண்டது. 2 நாளாக : 26 : 16

2. தேவ கோபம் உசியாவின்மேல் இருந்தது. 2 நாளாக : 26 : 17

3. உசியா தன் ராஜ பதவியை இழந்தார். 2 நாளாக : 26 : 24

வாலிபர்களே ! கர்த்தரைப் தேடும்போது உசியாவிற்கு வெற்றி , கீர்த்தி , மற்றும் காரியங்களெல்லாம் செழிப்படைந்தது. அதேசமயம் உசியா கர்த்தரைவிட்டு விலகி அவன் மேட்டிமையடைந்தான்.

ஆலயத்தில் பிரவேசித்து தூபங்காட்டினான். கர்த்தருக்கு விரோத
மான காரியங்களை செய்ததால் அவன் சாபத்தை தேடிக்கொண்டான். இது உசியாவின் வீழ்ச்சி. வாலிபர்கள் கர்த்தரை கருத்தாய் தேடி அவரைப் பற்றிக் கொள்ளவேண்டும். அதேசமயத்தில் எந்த விதத்திலும் மேட்டிமை வரக்கூடாது. உசியாவின் பெருமைக்கு கர்த்தர் எதிர்த்து நின்றார்.
உசியா சாபத்தை தேடி வீழ்ச்சியடைந்தான்.

உங்கள் வாலிப நாட்களை தேவனோடு இனைத்து உங்களை காத்துக் கொள்ளுங்கள். ஆமென்

S. Daniel Balu, Tirupur.

Share this page with friends