The conversion of the fault Nagapattinam issue

மதம் மாறியது தவறா? நாகையில் நடந்தது என்ன?

சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் அலைக்கழித்த அவலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கத்தரிப்புலம் செண்பகராமநல்லூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். அவரது மனைவி ஜெகதாம்பாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவரது உடலை அவரது உறவினர்கள் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய விரும்பினர். ஆனால் செண்பகநல்லூரில் கிறிஸ்தவ முறைப்படி உடலை புதைப்பதற்கான கிறிஸ்தவ இடுகாடு இல்லாததால் அங்கிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரமுள்ள நாகையில், நாகை நகராட்சிக்கு சொந்தமான இடுகாட்டில் அடக்கம் செய்ய முடிவெடுத்தனர்.

நாகையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடுகாட்டில் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய இருந்த சூழ்நிலையில் அங்கிருக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு உண்டானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த நாகப்பட்டினம் நகர காவல்நிலைய ஆய்வாளர் கிறிஸ்தவ சபை நிர்வாகிகள் மற்றும் ஜெகதாம்பாள் உறவினர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இறந்தவர் உடலை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்ய வேண்டுமானால் கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய அவர்களை அறிவுறுத்தினர்.

இதனையடுத்து அம்மையார் ஜெகதாம்பாள் உடல் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

வயது முதிர்ந்த தாயாரின் சடலம் அடக்கம் செய்ய முடியாமல் சில மணி நேரங்கள் நாகையில் அலைக்கழிப்பு செய்யப்பட்டது கிறிஸ்தவர்கள் நடுவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை வீடியோவாக பாருங்கள்

Share this page with friends