மாயவித்தைக்காரர்! – (CURIOUS ARTS, SORCERER)

இவர்கள், மந்திரதந்திரங்களைச் செய்கிறவர்கள். இதற்கான கிரேக்க வார்த்தை “பெரீர்கோஸ்” (periergos) என்பதாகும். (practicing magic) (அப் 19.19); (a busy body) {1தீமோ 5:13),
மந்திரவாதிகள் மரித்தோரைக்கூட உயிரோடு எழுப்புவதாக மாயஜாலம் பண்ணுகிறார்கள். தெரியாத காரியங்களை அறிவிப்பது, குறிசொல்லுவது, வியாதிகளைக் குணப்படுத்துவது, வியாதிகளை உண்டாக்குவது, சொப்பனங்களுக்கு வியாக்கியானம் பண்ணுவது, குழந்தை பிறப்பதற்கு முன்பே அது ஆணா, பெண்ணா என்று அறிவிப்பது, அன்றாட ஜீவியத்தில் நட்சத்திரங்கள், ராசிகள் ஆகியவற்றின் கிரியைகளை அறிவிப்பது ஆகிய காரியங்களை மாயவித்தைக்காரர்கள் செய்து வந்தார்கள்.
இவர்கள் தாங்கள் செய்வது தவறு என்பதையும், அவை பிசாசின் கிரியைகள் என்பதையும் அறிக்கையிட்டார்கள். (அப் 19.18) இந்த மாயவித்தைகளுக்கெல்லாம் தனித்தனியாக புஸ்தகங்கள் இருந்தன.
தங்களுடைய சந்ததியாருக்கும், சீஷர்களுக்கும் இவற்றைக் கற்றுக்கொடுப்பார்கள். அந்தப் புஸ்தகங்களையெல்லாம் கொண்டு வந்து எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள். (அப் 19:19) அந்த புஸ்தகங்களின் மொத்தக் கிரயம் ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகும்.
இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது. (அப் 19:20)
இன்றைய நவீன ஊழியரின் கிரியைகள் மாயவித்தைக்காரரின் கிரியைகளை ஒத்திருப்பது வேதனையல்லவா?
சத்தியத்தில் தெளிவாய் இருப்பதுதான், அத்தனையிலும் தெளிவு! ஆமென்!