குடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம்?
குடும்ப வாழ்வில் வெற்றி இல்லாததற்கு காரணம் தேர்ந்தெடுப்பு தவறானதே காரணம்…
ஏற்ற துணையை தேடாமல்
சொந்த ஜாதியை தேடியது.
இரட்சிப்பை பார்க்காமல்
கண் இச்சையை நிறைவேற்றியது.
ஜெபித்து முடிவு எடுக்காமல்
சுயமாக முடிவெடுத்தது.
தேவ சத்தம் கேட்காமல்
மனித சத்தம் கேட்டது.
ஆவியில் முடிவெடுக்காமல்
மாம்சத்தில் முடிவெடுத்தது.
குணத்தை பார்க்காமல்
பணத்தை பார்த்தது.
பாசத்தை நாடாமல்
வேஷத்தை கைகோர்த்தது.
நட்பை பயன்படுத்தாமல்
நடிப்பை பயன்படுத்தியது.
அபிசேகத்தை காணாமல்
அழகை கண்டது.
அழைப்பை கணம் செய்யாமல்
அலங்காரத்தை தூக்கி வைத்தது.
சரீர பலத்தை பார்க்காமல்
வெளிப்புறத்தை பார்த்தது.
சாட்சியை ஏற்றுக்கொள்ளாமல்
சாதனையை ஏற்றுக் கொண்டது.
உண்மையை தள்ளிவிட்டு
ஊதாரியை மணமுடித்தது.
இறைபயத்தை விரும்பாமல்
குறை மையத்தை அணைத்தது.
தன்மானத்தை நோக்காமல்
வருமானத்தை நோக்கினது.
ஆவிக்குரிய வாழ்வை சோதிக்காமல்
இம்மைக்குரிய வாழ்வை அமைத்தது.
இன்னும் சொல்ல போனால் பெண் மற்றும் மாப்பிள்ளையை தேர்ந்தெடுப்பதில் அசதியாயிருந்து வசதி வாய்ப்பே பெரியது என்று நினைத்து தரம் தாழ்ந்த துணையை தேர்ந்தெடுத்து சீரழிகிறதை இன்று உலகமுழுவதும் பார்க்க முடிகிறது. ஆகவே பெற்றோர்கள் மற்றும் திருமணத்திற்கு ஆயத்தமாக உள்ள பிள்ளைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
SDavid Livingstone