ஒதுங்குவதும் பதுங்குவதும்
சூரியன் உதிக்கையில்
ஒதுங்குவதும்
தங்கள் தாபரங்களில்
பதுங்குவதும்
பால சிங்கங்களே
சூரியன் உதிப்பதற்கு முன்
எழும்புவதும்
வனாந்தரத்திற்குப் போய்
ஜெபிப்பதும்
யூத ராஜ சிங்கமே

சூரியன் உதித்தபின்னும்
இன்னும் கொஞ்சம் தூங்கட்டும்
இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்
இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக் கொண்டு
நித்திரை செய்யட்டும் என்கிறவர்கள்
இக்கால இளம் சிங்கங்களே
சூரியனை காண்பது
கண்களுக்கு பிரியமே
இது ஞானிக்கு தெரிந்த விஷயமே
தன் மணவறையிலிருந்து
புறப்படுகிற மணவாளனைப் போல
பராக்கிரமசாலியைபோல
தன் பாதையில் ஓட
மகிழ்ச்சியாய் இருக்கிற
அந்த ஆதவனைக் காண
வீறுகொண்டு எழும்பு இளம் சீயோனே
தன் பாதையில் ஓட சூரியனுக்கு
மகிழ்ச்சி உண்டு!
உன் பாதையில் ஓட உனக்கு
மகிழ்ச்சி உண்டா ?
அதிகாலையில் ஆதவனைப் பார்
அதற்கு முன் நீதியின் ஆதவனைப் பார்
இதற்காகக் காசு கொடுத்து கன்னியாகுமரிக்குப்
போக வேண்டிய அவசியம் இல்லை.
நீதியின் சூரியனை, நீ இருக்கும் இடத்திலேயே காணலாம்
அதன் செட்டைகளுக்குள்ளே
ஆரோக்கியத்தைப் பெறலாம்
லாக் டவுன் என்றாலும்
ஆவியில் வெளியே புறப்பட்டு
அமெரிக்காவுக்குக் கூடச் செல்லலாம்
கொழுத்தக் கன்று போல வளரலாம்
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்
ஜீவத்தண்ணீர் ஊழியங்கள்-மதுரை-14