என்று தணியுமோ இந்த கொரோனாவின் தாக்கம்

அறியாமலும் உணராமலும்
அந்தகாரத்தில் நடக்கிறவர்களை
நினைக்கும்போது
என் எண்ணத்தில் உதித்ததை
எழுதுவது என் மேல் விழுந்த கடமை

தானியம் தின்ன
தரைக்கு வரும் பறவைகள்
கொத்தி கொத்தி தின்று
வயிற்றை நிரப்பிக்கொள்கின்றன
தரையில் வாழும் மனிதனோ
அவ்வப்போது ஏற்படும்
மாற்றங்களாலும்
மன அதிர்வுகளாலும்
முட்டி முட்டி அழுது
குழப்பம் என்கிற குடிநீரை
குடித்துக்கொண்டிருக்கிறான்

என்று தணியுமோ இந்த
கொரோனாவின் தாக்கம்

என்று மாறுமோ இந்தத்
தடையும் தட்டுப்பாடுகளும்

இயல்பு வாழ்கைக்குத் திரும்ப
ஜெபித்துக்கொண்டிருக்கும்
இந்தியக் குடிமகன்


பாஸ்டர் ஜே.இஸ்ரேல் வித்ய பிரகாஷ்,
ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14

Share this page with friends