இந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன?

இந்தியாவில் மத பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? ஒரு அலசல்..
நம் நாட்டை பொறுத்தமட்டில் இலக்கியங்கள் புராணங்கள் இதிகாசங்கள் காவியங்கள் மற்றும் கதைகள் இவற்றிற்கு பஞ்சம் இல்லை.
இலக்கியங்கள் இலக்கியங்களாகவும், புராணங்கள் புரணங்களாகவும், இதிகாசங்கள் இதிகாசங்களாகவும், காவியங்கள் காவியங்களாகவும், கதைகள் கதைகளாகவும் இருக்கும் வரையில் பிரச்சனை இல்லை ஆனால் இவைகள் எல்லாம் “எப்பொழுது வரலாறாக சரித்திரமாக மாறுகிறதோ… மாற்றப்படுகிறதோ அல்லது மாற்றும் படி நிர்பந்திக்கப்படுகிறதோ அப்போது தான் பிரச்சனை ஆரம்பமாகிறது”
காரணம் மதவெறியர்கள் மற்றும் மதம் சார்ந்த பேச்சாளர்கள் இதை பற்றி பேசும் போது கேட்கிறவர்களுக்கு பல கேள்விகள் எழும்புகிறது அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பதில் சொல்ல தெரியாமல் விமர்சனங்களை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தங்களது மதம் சார்ந்த வெறிபிடித்த உறுப்பினர்களையும் காசுக்காக எதையும் செய்யும் கும்பலையும் தூண்டி விட்டு கலகத்தை செய்கிறார்கள்.
பஸ் மறியல் பொதுசொத்தை சேதப்படுத்துதல் மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களை இடிப்பது அது மட்டுமல்ல அவர்களை அவமானப்படுத்தும் ஈனச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் பல ஈனப்பிறவிகள்….
நான் தெரிந்து தான் கேட்கிறேன் விமர்சனங்களுக்கு நிதானமாக பதில் சொல்ல தெரியாத முடியாத நீங்கள் எப்படிப்பட்ட வழிகளை தெரிந்து கொண்டாலும் உண்மை தான் ஜெயிக்கும்.
S.David Livingstone