How God's children should not be fed

ஆகாரம் பற்றி வேதம் கூறும் காரியங்கள்

1) போஜனபிரியன் தரித்திரன் ஆவான் – நீதி 23-2

2) போஜன பிரியனாயிருந்தால் தொண்டையில் கத்தியை வை – நீதி 23-2

3) மாம்ச பெருந்தீனிக்காரருடன் சேரக்கூடாது – நீதி 23-20

4) போஜனத்தினால் இருதயம் ஸ்திரப்படாது – எபி 13-9

5) போஜனத்தினால் நாம் தீட்டு (கறை) படக்கூடாது – தானி 1-8

6) பெருந்திண்டியினால் இருதயம் பாரம் அடைய கூடாது – லூக் 21-34

7) போஜனம் சகோதரனுக்கு இடறல் உண்டாக்க கூடாது – 1 கொரி 8-13

8) போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்க மாட்டாது – 1 கொரி 8-8

9) போஜனபிரியரூக்கு தோழனாக இருப்பவன் தன் தகப்பனை அவமானப் படுத்துகிறான் – நீதி 28-7

10) உன் சத்துரு பசியாய் இருந்தால் அவனுக்கு புசிக்க ஆகாரம் கொடு – நீதி 25-21

11) தேவனுடைய ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்க தசம பாகம் கொடுக்க வேண்டும் – மல்கி 3-10

12) தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல – ரோ 14-17

13) கர்த்தருக்கு என்று புசிக்க வேண்டும் -ரோ 14-6

14) புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாக நினைக்க கூடாது – ரோ 14-3

15) புசியாதிருக்கிறவன் புசிக்கிறவனை குற்றவாளியாக தீர்க்க கூடாது – ரோ 14-3

16) நமது ஆகாரத்தை ஏழைகள், அநாதைகள் உடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும் – யோபு 31-17

17) மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் – உபா 8-3

Share this page with friends