யார் இயேசுவோடிருக்க முடியும்? யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்?

யார் இயேசுவோடிருக்க முடியும்?
யாருக்கு அவரால் ஊழியம் தரமுடியும்?

பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான் (லூக்கா 8:38)
பிசாசுகள் நீங்கினால்தான் நாம் அவரோடிருக்கமுடியும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

பிசாசுகள் நீங்கினவனுக்குத் தான் ஆண்டவர் ஊழியம் தந்து, ஊழியக்காரனாக ஏற்படுத்துகிறார்.

இயேசு அவனை நோக்கி; நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய் இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான் (லூக்கா 8:39).

அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும், ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.(Luke 8 : 1,2)

Pr. Israel Vidya Prakash, Madurai

Share this page with friends