உலக அளவில் வாழும் சிறுவர்கள் புள்ளிவிவரங்கள்

உலக அளவில் வாழும் சிறுவர்கள் புள்ளிவிவரங்கள்

உலக அளவில் 2020 ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 2.2 பில்லியன் சிறுவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் வாழும் சிறு பிள்ளைகளுக்காக ஜெபிக்கும்படி சில புள்ளி விபரங்களை உங்களுக்கு தருகிறோம்.

குழந்தை திருமணம்:

2019ம் ஆண்டு ஜீன் மாத கணக்கெடுப்பு படி உலக அளவில் ஐந்தில் ஒரு சிறுவர் 15 வயதுக்கு முன்னதாகவே திருமண பந்தத்துக்கு தள்ளப்படுவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது சர்வதேச அளவில் 11.5 கோடி ஆண்பிள்ளைகள் குழந்தை திருமணத்துக்கு உள்ளாகிறார்கள்.

மேலும் 650 மில்லியன் சிறுமிகள் திருமணமாகி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி பாட நூல்களை ஏந்த வேண்டிய கரங்கள்  இன்று பச்சிளங்குழந்தைகளை தன் பிஞ்சு கரத்தில் ஏந்தி நிற்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்களை 82 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு யுனிசெப் தெரிவித்துள்ளது.


வறுமையில் சிறுவர்கள்:

உலக அளவில் தோராயமாக 663 மில்லியன் சிறுவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அதாவது சுத்தமான தண்ணீர், உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் தவிக்கின்றனர். இவர்களில் 385 மில்லியன் சிறுவர்கள் கடுமையான வறுமையில் சிக்கியிருப்பதாக யுனிசெப் நிறுவனம் கூறுகிறது.

மேலும் 2020ம் ஆண்டு இறுதியில் 8.6 கோடி சிறுவர்கள் கொடிய வறுமையில் தள்ளப்பட இருப்பதாக யுனிசெப்பும் சிறுவர்களை பாதுகாப்போம் என்ற அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வு கூறுகிறது. மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் தேசிய வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சிறுவர்களின் எண்ணிக்கை 67.2 கோடியாக அதிகரிக்கும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது


சிறுவர்களிடையே தற்கொலை

உலக அளவில் சிறுவர்களிடையே தற்கொலைகள் பெருகிவருகிறது. 81 நாடுகளில் எடுத்த கணக்கெடுப்பு படி கடந்த 20 ஆண்டுகளில் 10 முதல் 14 வயதிற்குட்பட்டவர்களில் 1 லட்சம் சிறுவர்கள் தற்கொலை செய்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது.

குழந்தை தொழிளாளர்கள்

International Labour organization கணக்கெடுப்பு படி உலக அளவில் 5 முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்களில் 218 மில்லியன் சிறுவர்கள் குழந்தை தொழிளாலர்களாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய சிறுவர்கள் வறுமையின் காரணமாகவும், முதலாளித்துவ அடிமைத்தனத்தின் காரணமாகவும் நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். பெரியவர்கள் செய்யும் வேலைக்கு ஈடாக, மற்றும் பெரியவர்கள் செய்ய மறுக்கும் சில ஆபத்தான வேலைகளையும் இத்தகைய சிறுவர்கள் ஒரு வேளை உணவுக்காகவும், குறைந்த அளவில் கிடைக்கும் வருமானத்திற்காவும் செய்து வருகின்றனர்.

சிறுவர் அனாதை இல்லங்கள்

2015ம் ஆண்டு யுனிசெப்  கணக்கெடுப்பு படி உலக அளவில் 140 மில்லியன் சிறுவர்கள் அநாதை இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15.1 மில்லியன் சிறுபிள்ளைகள் உண்மையில் பெற்றோரை சாக கொடுத்த அநாதைகள் அல்ல. இவர்களின் பெற்றோர் உயிரோடிருந்தும் அனாதையாக்கப்பட்டவர்கள் என்பது வேதனையளிக்கும் செய்தி

சிறுவர்களிடையே பாலியல் வண்கொடுமை:

உலக அளவில் 2 வயது முதல் 17 வயது வரையுள்ள சிறு பிள்ளைகளில் சுமார் 1 பில்லியன் சிறுவர்கள் பாலியல் வண்கொடுமையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொட்டிலில் தூங்கும் பச்சிளங்குழந்தையும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்பது வேதனையளிக்கிறது. குடும்ப வறுமையின் காரணமாக விபச்சாரத்திற்கு தள்ளப்படும் சிறுவர்கள் ஒருபுறமிருக்க,  விபச்சாரத்திற்கு பயன்படுத்தும்படி பிள்ளைகளை கடத்தும்  நிகழ்வுகளும் ஆங்காங்கே பல நாடுகளில் நடக்கதான் செய்கிறது.

சிறுவர்களின் அடிமைத்தனம்:

இக்கால சிறுவர்களின் ஞானம் அபாயகரமானதாகவும் விபரீதங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் சில நேரங்களில் அமைந்துவிடுகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறுவர்கள் ஏராளம் பெருகியுள்ளனர். இதனால் கண், விரல், மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பல உயிரிழப்புகளும் பல நாடுகளில் நடந்துள்ளது. நவீன தொழிழ்நுட்ப விஞ்ஞானத்தால் தயாரிக்கப்படும் அனிமேஷன் தயாரிப்புகள் சில நேரங்களில் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. குடி, போதை பொருட்கள் சரீர ரீதியாகவும், மொபைல், கணினி, டிவி போான்றவைகள் மனரீதியாகவும் சிறுவர்களை அடிமைப்படுத்துகிறது.

இறுதியாக சில வார்த்தைகள்:

அன்பானவர்களே.. இந்த புள்ளி விபரங்கள் பல்வேறு இணையதளங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவைகள். இவைகளை ஜெபத்திற்காக மட்டுமே கொடுத்துள்ளோம். உலகளாவிய சிறுபிள்ளைகளுக்காக கருத்துடன் ஜெபியுங்கள். எழுப்புதல்.. பாதுகாப்பு.. ஆசீர்வாதம் இம்மூன்றையும் சிறுவர்கள் நடுவில் தேவன் நிறைவாய் தருவாராக.

Share this page with friends