• Sunday 7 December, 2025 04:27 PM
  • Advertize
  • Aarudhal FM
போஸ்ட் ஆபீஸ் வங்கி வேலை வாய்ப்பு; 348 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

போஸ்ட் ஆபீஸ் வங்கி வேலை வாய்ப்பு; 348 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

  • 20251029
  • 0
  • 301

 29 Oct 2025 

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் (IPPB) பணிபுரிய அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி தகுதிக்கு நிர்வாகி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் மொத்தம் 348 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Executive 

காலியிடங்களின் எண்ணிக்கை: 348

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 20 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/ippblaug25/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு தற்போது தபால் அலுவலகத்தில் ஜி.டி.எஸ் எனப்படும் கிராம அஞ்சல் ஊழியர்களாக பணியாற்றி வருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2025

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கும் ரூ.750

Summary

Post Office Bank Job Opportunity; 348 vacancies, degree holders can apply!

Post Tags: