• Sunday 6 July, 2025 01:27 AM
  • Advertize
  • Aarudhal FM

தினமும் பாதாம் பால் பருகுங்கள்

10 பாதாம் கொட்டைகளை இரவு ஊறவைத்து விடவும். மறுநாள் காலை பாதாமின் தோலை உரித்துவிட்டு அரைத்து, ஒரு கப் பாலில் சேர்த்துக்கொள்ளவும்.

அதனுடன் ஒரு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை ஜாதிக்காய் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை சேர்க்கவும். இந்த பாலை தினமும் பருகி வருவதால் உடலில் ஆரோக்கியம் பெருகுவதுடன் நமக்கு ஏற்படும் பதற்றம், கவலை ஆகியவற்றையும் நீக்குகிறது.

என்ன நீங்க 5 மணிநேரத்துக்கு கம்மியா தூங்குறீங்களா? அச்சச்சோ

ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாதம் வரலாம் → நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்து புற்றுநோய் வரும் வாய்ப்பு ஏற்படலாம் டைப் 2 நீரிழிவு வரலாம் → குறைவான தூக்கம் பசியை கட்டுப்படுத்தும் லெப்டின் & கிரெடின் ஹார்மோன்கள் சமநிலையை இழக்கும். இதனால் அதிக பசி ஏற்பட்டு, உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

நீங்க லேட்டாவா தூங்குறீங்க கெட்டுச்சு போங்க..

ஏன் என்றால்.. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை நாம் உறங்கும்போது, உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது.

11-1 மணிக்கு கல்லீரல், பித்தப்பை நச்சு நீக்கம்;

1-3 மணிக்கு ஆழ்ந்த உறக்கம், கனவுகள்;

3-5 மணிக்கு சிறுநீரகம், குடல் கழிவு நீக்கம்;

5-6 மணிக்கு உடல் விழித்தெழத் தயார் என உடலியல் ரீதியாகப் பல அற்புதங்கள் நம்மை அறியாமலேயே நிகழ்கின்றன! இதைதான் நாம டிஸ்டர்ப் பண்றோம்…

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கை இப்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனப் பல்வேறு எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தினர். இதற்கிடையே அஜித் குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

சிவகங்கை மாவட்டத்தில் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். போலீசார் தாக்குதலே அவரது மரணத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு ஏற்கனவே சிபிஐசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐக்கு மாற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்இது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன்.இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு அரசு நடவடிக்கைநேற்றைய தினம் , 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எத்துக்கப்பட்டு வருகிறது.துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமார் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்விதப் பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்.சிபிஐக்கு மாற்றம்சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு வழங்கும்.

இந்து கோயிலாக மாறிய கிறிஸ்தவ தேவாலயம்

ராஜஸ்தான் கிராம மக்கள் மீண்டும் இந்துக்களாக மாறியதால் கோயிலாக மாறிய தேவாலயம்

அர்ச்சகராக மாறிய கிறிஸ்தவ மத போதகர்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ் வாரா மாவட்டம் சோட்ல குடா கிராமத்தில் பழங்குடியின மக் கள் அதிகளவில் வசிக்கின்றனர்.கவுதம் கராசியா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி உள்ளார். இதையடுத்து அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் (சர்ச்) கட்டி பிரார்த்தனை செய்து வந் துள்ளார்.இந்த சூழ்நிலையில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கிராம மக்கள் மீண்டும் இந்து மதத்துக்கு மாற முடிவு செய்தனர். இதையடுத்து, தேவாலயத் துக்கு காவி வண்ணம் தீட்டினர். சுவரில் இருந்த சிலுவை குறி யீட்டை அழித்துவிட்டு இந்து மத குறியீடுகளை வரைந்துள்ளனர்.இந்நிலையில், அந்த கோயி லில் பைரவர் சிலை பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் நடை பெற்றது. முன்னதாக, அந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட் டனர். கிறிஸ்தவ மத போதக ராக இருந்த கவுதம், இந்தக் கோயிலின் அர்ச்சகராக இருப் பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

மிளகாய் பொடி தூவி, கழுத்தை மிதித்து கணவர் கொலை!

மிளகாய் பொடி தூவி, கழுத்தை மிதித்து கணவர் கொலை!

திருமணத்தை மீறிய உறவு, குடும்பங்களை சிதைத்து வருகிறது. அப்படியொரு சம்பவம் கர்நாடகாவின் காடஷெட்டிஹள்ளியில் நடந்துள்ளது. காதலருடன் சேர்ந்து கணவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, பின்னர் தனது கால்களால் கழுத்தை மிதித்து மனைவி கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சடலத்தையும் கோணியில் கட்டி 30 கி.மீ அப்பால் எடுத்துச் சென்று வீசி வந்ததையும் கைதான மனைவி ஒப்புக் கொண்டுள்ளார்.

மனைவியை கொன்று சடலத்துடன் உறங்கிய கணவன்

கன்னியாகுமரி கருங்கல் பகுதியில் நடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மனைவியை கொன்றுவிட்டு சடலத்தின் அருகே 12 மணி நேரம் உறங்கிய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்ததால் மரியாதை கிடைக்கவில்லை என்றும், மதுபோதையில் இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொஞ்ச நேர கோபம் என்ன பண்ணிருக்கு பார்த்தீங்களா?

வாய், மூக்கில் ரத்தம்… பள்ளியில் 7 வயது மாணவன் மரணம்

காலையில் மகிழ்ச்சியாக பள்ளி சென்ற சிறுவன், மாலையில் உயிரிழந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நடந்துள்ளது. தனியார் CBSE பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்ற மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் சென்றபோது, வாய், மூக்கில் ரத்தம் கசிந்தவாறு மாணவன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மொபைல் பார்த்துட்டே சாப்பிடுபவர்களா நீங்க? இந்த விளைவுகளை சந்திக்க தயாராகிக்கோங்க

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போன்களில் மூழ்கி இருப்பதை பார்த்து வருகிறோம். வேலை செய்யும் போது, சாப்பிடும் போது என அனைத்து அன்றாட செயல்முறைகளின் போதும் மொபைல் போன்களைப் பார்ப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதிலும் தூங்கும் முன் செல்போன் பார்க்கும் பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி விட்டனர்.

மொபைல் போன்கள் மட்டுமல்லாமல் மடிக்கணினி, தொலைக்காட்சி பார்ப்பது அல்லது வேறு சில திரைகளைப் பார்ப்பது பொதுவானதாக மாறிவிட்டது. ஆனால், சாப்பிடும் போது இந்த திரைகளைப் பார்ப்பது மிகவும் கெடுதலாகும். சாப்பிடும் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் சில பக்கவிளைவுகளைக் காணலாம்.

சாப்பிடும் போது மொபைல் பயன்படுத்துவதன் பக்க விளைவுகள்

உணவு உண்ணும் போது மொபைல் போனைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானதாகும். இதில் உணவு உண்ணும் சமயத்தில் மொபைல் போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் சிலவற்றைக் காண்போம்

கவனச்சிதறல்

உணவு உண்ணும் போது, டிவி பார்ப்பது, மொபைல் போன் பார்ப்பது போன்றவற்றால் மூளை திசைதிருப்பப்படுகிறது. இதனால் சாப்பிடுவதில் கவனம் இல்லாமல் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. உணவை சரியான முறையில் கவனத்துடன் உட்கொள்வதன் மூலம் மட்டுமே உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும்.

அஜீரணக் கோளாறு

தொலைக்காட்சி, மொபைல் பயன்பாட்டின் போது சாப்பிடுவதால் சில சமயங்களில் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் இல்லாமல் போகலாம். இதனால் செரிமான கோளாறு ஏற்படுகிறது. இந்த சமயத்தில் உடலால் உண்ணப்படும் உணவின் அளவையோ அல்லது எந்த வகையான உணவையோ சரியாக செரிமானம் செய்ய முடியவில்லையெனில் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

உடல் பருமன் பிரச்சனை

தொலைக்காட்சி அல்லது மொபைல் பார்க்கும் போது எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த முடியாமல் அதிகம் சாப்பிடும் நிலை ஏற்படலாம். இதனால் சில சமயங்களில் அதிகளவு உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு அதிகம் உணவு உட்கொள்வது உடல் பருமன் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

திருப்தியில்லாமல் இருப்பது

மனம் ஒரே நேரத்தில் இரு விஷயங்களில் கவனம் செலுத்தும் நிலையில், ஒன்றை மட்டும் சரியாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்படலாம்.

குறைந்த வளர்ச்சிதை மாற்றம்

சாப்பிடும் போது திரைகளைப் பார்ப்பது வளர்ச்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கிறது. இதனால் உணவு மெதுவாக செரிமானம் அடையலாம். மேலும், உடலில் கொலஸ்ட்ராலும் மெதுவாக கரைகிறது.

இவ்வாறு மொபைல், டிவி, மடிக்கணினி போன்ற பல்வேறு திரைகளைப் பார்ப்பது பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

உதவி செய்து மகிழுங்கள் சாதனையாளர்களாக மாறுங்கள்

1896 ஆம் ஆண்டில், மின்சார விளக்கைக் கண்டுபிடித்த சிறந்த கண்டுபிடிப்பாளரான தாமஸ் எடிசன், ஒரு காரை வடிவமைக்கும் யோசனையில் வேலை செய்து கொண்டிருந்தார், அவர் தம்மிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் ஒரு சோதனை காரை உருவாக்கி இருப்பதைக் கேள்விப்பட்டார்.

எடிசன் அந்த இளைஞனை நியூயார்க்கில் நடந்த தனது நிறுவனத்தின் பார்ட்டியில் சந்தித்து கார் பற்றி கேட்டறிந்தார். அவர் அவனது ஐடியாக்களால் ஈர்க்கப்பட்டார்! அந்த இளைஞனைப் போலவே அவருக்கும் ஒரு காரை வடிவமைக்கும் அதே யோசனை இருந்தது.

எடிசன் மின்சார ஆற்றல் மூலமாக அந்த காரை இயக்கும் ஐடியாவில் இருந்தார், ஆனால் அந்த இளைஞன் காரை இயக்குவதற்கு பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்தப்போதாக கூறினான். அவர் ஆச்சர்யத்தில் தனது கையை மேஜை மீது குத்தி, “இளைஞரே, அபாரம், உண்மையில் உனது யோசனை சிறப்பானது. வெற்றிக்கான விஷயங்கள் அனைத்தும் உங்களிடம் உள்ளது! நீங்கள் பெரிய வெற்றி பெறுவீர்கள்” என்றார்.அந்த நேரத்தில் அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்படும், கொண்டாடப்படும் கண்டுபிடிப்பாளரின் இந்த ஊக்கமூட்டும் வார்த்தைகளால், ஹென்றி ஃபோர்டு தனது வேலையைத் தொடர்ந்தார், ஒரு காரைக் கண்டுபிடித்தார், பிறகு ஒரு கார் தொழிற்சாலையை தொடங்கினார். பெரும் பணக்காரர் ஆனார்.

டிசம்பர் 9, 1914 அன்று, எடிசனின் ஆய்வகம் மற்றும் தொழிற்சாலை தீக்கிரையானது. அவர் 67 வயதானவர் மற்றும் காப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை. எறியும் சாம்பல் அடங்கும் முன், ஹென்றி ஃபோர்டு 7,50,000 டாலர்களுக்கான காசோலையை எடிசனிடம் கொடுத்தார், உங்களுக்கு மேலும் தேவைப்பட்டாலும் உதவ நான் இருக்கிறேன், என்று கூறிச் சென்றார்.1916 ஆம் ஆண்டில், ஹென்றி ஃபோர்டு தனது வீட்டை எடிசனின் வீட்டிற்கு அடுத்த கட்டிடத்திற்கு மாற்றினார்,

சிறிது காலத்தில் எடிசன் நடக்க முடியாமல் சாய்வு நாற்காலியில் அவரது மருத்துவர்களால் உட்கார வைக்கபட்டபோது, ஹென்றி ஃபோர்டு தனது வீட்டில் ஒரு சக்கர நாற்காலியை வாங்கினார், தனது நண்பர் மற்றும் வழிகாட்டிக்காக, அவர் அங்கும் இங்கும் நகர வேண்டும் என்பதற்காக தமது வீட்டில் பெரிய அறையை நிறுவினார்.எடிசன், ஹென்றி ஃபோர்டுக்கு தனது பலத்தை உணர்த்தினார், தன்மீது ஹென்றிக்கு நம்பிக்கை வர காரணமாக இருந்தார். அதனால் வாழ்நாள் முழுவதும் தமக்கான ஒரு நல்ல நண்பரைப் பெற்றார்!

பாடம் :மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமை கொள்ளாதீர்கள். உங்களால் பந்தயத்தில் வெற்றிபெற முடியாவிட்டால், சாதனையை முறியடிக்க உங்களுக்கு முன்னால் ஓடுபவர்களுக்கு உதவுங்கள்!உங்கள் மெழுகுவர்த்தி மற்றொரு மெழுகுவர்த்தியை ஏற்றும்போது அதன் ஒளியை இழக்காது!