• Monday 15 September, 2025 02:54 AM
  • Advertize
  • Aarudhal FM

சுட்டுக் கொல்லப்பட்டார் சுவிசேஷகர். சார்லி கிரிக்

சார்லி கிர்க், 32 வயது அமெரிக்கா சுவிசேஷகர் ‘நேற்றையதினம் குறிப்பிட்ட பல்கலைக் கழகத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். இவர் சமரசம் இல்லாமல் கர்த்தருடைய வார்த்தையை போதித்தவர். அமெரிக்க மக்களின் பாவங்களை தைரியமாக கண்டித்தார். மக்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பை சந்தித்தே ஆக வேண்டும் என எச்சரித்தார்.

நேற்று utha university ல பேசி கொண்டிருக்கும் போது கழுத்தில் சுடப்பட்டார். இவர் இளம் வயதில் அமெரிக்க மக்களால் அறியப்பட்டவர். விவாகரத்து, வேதத்துக்கு முரணான ஆண்-ஆண், பெண்-பெண் திருமணம், கருக்கலைப்பு போன்றவற்றை எதிர்த்தார். பல்கலை மாணவர்கள் இடையில் மாபெரும் மாற்றம் கொண்டுவந்தவர். சுவிசேஷத்தை தைரியமாக பிரசங்கித்த இவர் ஒரு யூதர். அவரது திடீர் மரணம் அமெரிக்க திருச்சபைகளுக்கு மிகப் பெரிய இழப்பு!
-சத்தியம் ஒருபோதும் சமரசம் செய்வதில்லை

TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு.பணியில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்ச்சி அவசியம்.TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.TET தேர்வுக்கு விண்ணப்பிக்கு இன்றுடன் அவகாசம் நிறைவு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 10ம் தேதி மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வு பெற TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலனை

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2010 ஆக.23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாடம் பயிற்றுவிக்கும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த சட்டம் தமிழகத்தில் 2011-ல் தான் நடைமுறைக்கு வந்தது. அதன்பின் தமிழகத்தில் டெட் தேர்ச்சி அடிப்படையிலேயே ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் இல்லாதவர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும், தனியார் பள்ளிகளிலும் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் முருகானந்தம் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சட்ட நிபுணர்களின் பரிந்துரையின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் எனவும், ஆசிரியர்கள் டெட் தேர்ச்சி பெறும் ஏதுவாக ஆண்டுக்கு 2 முறை தேர்வை நடத்தவும் முடிவாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியது: “உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 2 ஆண்டுகளில் 4 டெட் தேர்வுகள் நடத்தப்படும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆசிரியர்கள் தேர்ச்சிபெற வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பு நவம்பரில் டெட் தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து உடனடியாக ஜனவரி அல்லது பிப்ரவரியில் அடுத்த டெட் தேர்வை நடத்த இருக்கிறோம்.

மேலும், ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு டெட் தேர்வு நடத்துவது குறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம். தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகம் திரும்பியதும், இந்த முடிவுகள் குறித்து அவரிடம் ஆலோசனை செய்யப்படும். அதன்பிறகே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்

எம்மா குஷ்மேன் என்ற மாமனிதரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

மண்ணில் : 1863 – விண்ணில் : 1931

ஊர் : பர்லிங்டன், நியூயார்க்

தரிசன பூமி : கொனியா, ஆசியா மைனர்

முதலாம் உலகப் போரின்போது ஆர்மீனிய இனப்படுகொலை உலக வரலாற்றின் கொடுமையான காலங்களில் ஒன்றாகும். துருக்கியர்கள் சுமார் ஒரு மில்லியன் (10 லட்சம்) ஆர்மீனியர்களைக் கொன்றனர். மேலும் பெண்களையும் குழந்தைகளையும் கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார்கள். ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் நகரங்களை விட்டு பாலைவனத்தில் சாகும் வரை நடக்க பலவந்தம் படுத்தப்பட்டனர். தேவன் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட மிஷனரிகள் மூலம் தனது பரலோக அன்பை இந்த வெறுப்பு மற்றும் கொடுமையால் நிரம்பிய மக்களுக்கு கூட வெளிப்படுத்துவதை செறியெனக் கண்டார். இப்படி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் ஒருவர் தான் எம்மா குஷ்மேன்.எம்மா டார்லிங் குஷ்மேன். ஆசியா மைனரின் மிகப்பெரிய நகரமான கொனியாவில் (அப்போஸ்தலன் பவுல் காலத்தின் ‘இக்கோனியா பட்டண’) உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றிய ஒரு அமெரிக்க செவிலியர். எம்மா அமெரிக்கர்கள் மற்றும் ஆர்மீனியர்களை வெறுக்கும் அதே காயமடைந்த துருக்கியர்களை பராமரித்தும். மருத்துவமனையின் தலைமை செவிலியராகவும் இருந்தார். ஒருமுறை காயமடைந்த துருக்கியர் ஒருவர் அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவற்றில் பொருத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் படத்தை அகற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குஷ்மேன் அதற்க்கு. “இல்லை. மக்களுக்கு தேவன் அன்பாய் இருக்கிறார் என்று போதித்த பரம வைத்தியராகிய இயேசுவின் படம் இது. அவர் அதைக் போதித்ததாலும், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற என்னை அழைத்ததாலும், நான் உன்னை குணமாக்க உதவ இங்கே நிற்கிறேன்.” என்று உறுதியாகப் பதிலளித்தார். அந்த நபர் குணமடைந்த பிறகு இந்த விஷயத்தைக் குறித்து யோசிக்கலாம் என்று எண்ணினார். ஆனால் அவர் மருத்துவமனையில் செலவிட்ட நேரத்திலே. குஷ்மேன் மற்றும் பிற ஆர்மீனிய செவிலியர்களிடம் கிறிஸ்துவின் அன்பைக் கண்டார். அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்குள். அவர் முழுவதுமாய் மனமாறினார். எவ்வளவு தைரியமிக்க அன்பான பெண்மணியாய் திகழ்ந்தார் எம்மா!முதல் உலகப் போரின்போது, கொடூரமான இனப்படுகொலையின் மத்தியில், குஷ்மேன் மற்றும் அவரது செவிலியர் குழு காயமடைந்த துருக்கியர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும் சிகிச்சை வழங்கினர். அவரது வாழ்க்கையே ஒரு நூலிழையில் ஊசலாடுவதுபோல் இருந்தாலும், அவர் பல ஆர்மீனிய சிறுவர்களையும் சிறுமிகளையும் மரண தறுவாயிலிருந்து காப்பாற்றினார். போரினால் அனாதையான அநேக குழந்தைகளை பராமரித்தார். அவர் அவர்களுக்கு எழுத. படிக்க கற்றுக்கொடுத்து. தையல் மற்றும் தோல் வெட்டுதல் போன்ற வேறு சில திறன்களைக் கற்றுக்கொள்ளவும் உதவினார். தன் முடிவு பரியந்தம் தன் மிஷனரி அழைப்பிற்கு உண்மையாக இருந்தார் எம்மா குஷ்மேன்.

பிரியமானவர்களே. நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்கிறீர்களா

கிறிஸ்தவ பள்ளியில் படித்த.. நிர்மலா சீதாராமனை மதம் மாற்றினார்களா?

டெல்லி: மதமாற்ற புகாரில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய சிபிஎம் கட்சியின் கேரள எம்பி ஜான் பிரிட்டாஸ், “நிர்மலா சீதாராமன் கிறிஸ்தவ பள்ளியில் படித்தார் அவரை யாராவாது மதம் மாற்றினார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் ரயில் நிலையத்தில், கேரளாவை சேர்ந்த மூன்று கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மத மாற்றம் செய்தல் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவர்கள் ஊழியம் செய்வதற்காக நாராயண்பூர் என்கிற ஊருக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு பழங்குடியின குடும்பத்தினருக்கு கிறிஸ்தவ மதம் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அந்த குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு கன்னியாஸ்திரிகள் வேலைவாய்ப்பு பெற்று கொடுத்திருக்கிறார்கள். மூன்று கன்னியாஸ்திரிகள் மற்றும் நாராயண்பூரை சேர்ந்த 21 வயது பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஆகியோர் துர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்திருக்கின்றனர்.

அப்போது அங்கு வந்த இந்துத்துவா அமைப்பை சேர்ந்த நபர்கள், இளம்பெண்ணை மதமாற்றம் செய்து கடத்துவதாக ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் கன்னியாஸ்திரிகளை கைது செய்திருக்கின்றனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 21 வயது இளம்பெண், தன்னை யாரும் கடத்தவில்லை, விருப்பப்பட்டுதான் கன்னியாஸ்திரிகளுடன் சென்றேன் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிபிஎம் கட்சியின் கேரள எம்பியனா ஜான் பிரிட்டாஸ் குரல் எழுப்பியிருக்கிறார். அவர் பேசியதாவது, “பாஜக தலைவர்களான ஜே.பி. நட்டா, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் அனைவரும் கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தவர்கள்தான். நீங்கள் கிறிஸ்தவராகிவிட்டீர்களா? இல்லையே, இந்துவாகத்தானே இருக்கிறீர்கள்.

அதேபோல, மருத்துவ சேவை மற்றும் கல்வித் துறைகளில் பாராட்டத்தக்க சேவை வழங்கும் கிறிஸ்தவர்களையும், கன்னியாஸ்திரிகளையும் நீங்கள் துன்புறுத்தக் கூடாது. இத்தகைய செயல்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும். நாட்டில் ஒவ்வொருவருக்கும் மத சுதந்திரம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

கேரள பாஜக இந்த விவகாரத்தில் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. கன்னியாஸ்திரிகள் ஜாமீன் கோரி துர்க் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். சத்தீஸ்கரில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கிறது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை என்று கேரள பாஜக கூறி வந்திருந்தது. ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜாமீனை எதிர்த்தனர். எனவே, கேரள பாஜகவின் கூற்று பொய் என நிரூபணம் ஆகி இருப்பதாக சிபிஎம் விமர்சித்திருக்கிறது.

மதம் மாறிய பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு: உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

மதம் மாறியதை மறைத்து பேரூராட்சித் தலைவர் தேர்தலில் வென்ற அதிமுக பெண் கவுன்சிலரின் தலைவர் பதவியை பறித்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதிப்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சிக் கவுன்சிலர் அய்யப்பன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேரூர் பேரூராட்சியில் 2022-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் 8-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலரானேன். பேரூராட்சித் தலைவர் பதவி பட்டியலினத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த தேர்தலில் 2-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அமுதாராணி வெற்றி பெற்றார். அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். 2005-ம் ஆண்டிலேயே மதம் மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்து, கிறிஸ்தவரை திருமணம் செய்தவர். இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் வேறு மதத்துக்கு மாறினால், அவர் பட்டியலினப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுப் பலனைப் பெற முடியாது.

இந்​நிலை​யில், கிறிஸ்​தவ​ரான அமு​தா​ராணி, தான் இந்து பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவர் என்று கூறி தேர்​தலில் போட்​டி​யிட்​டு, வெற்றி பெற்​றார். இது சட்​ட​விரோத​மானது. எனவே, தேரூர் பேரூ​ராட்​சித் தலை​வ​ராக உள்ள அமு​தா​ராணி​யின் பட்​டியலின சாதிச் சான்​றிதழை ரத்து செய்​து, அவரை தலை​வர் பதவி​யில் இருந்து தகுதி நீக்​கம் செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறி​யிருந்​தார்.

இந்த மனுவை தனி நீதிபதி விக்டோரியா கௌரி விசாரித்து, “இந்து பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி, கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டதற்கு அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று கூறி வேட்புமனுத் தாக்கல் செய்தபோதே, அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

ஒரு​வர் ஒரே நேரத்​தில் இரு சலுகைகளை அனுபவிக்​கக் கூடாது. இது அரசி​யலமைப்​புச் சட்​டத்தை ஏமாற்​றும் செய​லாகும். எனவே, அமு​தா​ராணி தலை​வர் பதவியி​லிருந்து தகுதி நீக்​கம் செய்​யப்பட வேண்​டும்” என்று உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்து அமுதா​ராணி மேல்​முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது

இந்த வழக்​கின் உண்​மை​யான பிரச்​சினை அமு​தா​ராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்​றுக்​கொள்​கிறா​ரா, அவர் ஞானஸ்​நானம் பெற்​றாரா என்​பது​தான். மனு​தா​ரர் ஞானஸ்​நானம் பெற்​றுக்​கொண்​டது உறு​திப்​படுத்​தப்​படு​கிறது. ஒரு​வர் ஒரு மதத்​திலிருந்து மற்ற மதத்​துக்கு மாறு​வது என்​பது அரசி​யலமைப்​பின் அடிப்​படை உரிமை​யாகும்.

ஆனால், ஞானஸ்​நானத்​துக்​குப் பிறகு புதிய அடை​யாளத்தை மறைத்​து, அரசி​யலமைப்​புச் சட்​டம் வழங்​கி​யுள்ள உரிமை​களை அனுபவிக்​கும் நோக்​கத்​துக்​காக, பட்​டியல் இன சமூக நிலை​யில் தொடரும்​போது சிக்​கல் ஏற்​படு​கிறது.

இந்த வழக்​கில் மேல்​முறை​யீட்டு மனு​தா​ரர் கிறிஸ்தவ மதத்​தைத் தழுவி உள்​ளார் என்​பது ஆதா​ரங்​களு​டன் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, தனி நீதிப​தி​யின் உத்​தரவு உறுதி செய்​யப்​பட்​டு, மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளனர்.

16 வயது சிறுவனுக்கு வெட்டு

கவின் ஆணவப்படுகொலை சம்பவத்தின் அதிர்ச்சியே ஒயாத நிலையில், சேரன்மகாதேவியில் வீடு புகுந்து பள்ளி மாணவனை 5 சிறார்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவியுடன் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவன் பழகியதால் மாணவியின் உறவினர்களான 5 சிறார்கள் இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மாணவன் சிகிச்சையில் உள்ள நிலையில், 5 சிறார்களும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

அப்பல்லோ ஹாஸ்பிடலில் CM ஸ்டாலின் அனுமதி

அப்பல்லோ ஹாஸ்பிடலில் CM ஸ்டாலின் அனுமதி

CM மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், 2 நாள்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இது வழக்கமான பரிசோதனை என்று முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. அவரின் உடல்நிலை குறித்து முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,

அரசு அலுவலக அலைச்சல் இல்லை: இனி டிஜிட்டல் மயம்

அரசு அலுவலக அலைச்சல் இல்லை: இனி டிஜிட்டல் மயம்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASY ஆக விண்ணபிக்கலாம்.

  1. பான்கார்டு: NSDL
  2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
  3. ஓட்டுநர் உரிமம் https://parivahan.gov.in/
  4. பாஸ்போர்ட் www.passportindia.gov.ink.
  5. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க.

தேங்காய் எண்ணெய்யில் இவ்ளோ நன்மையா

பல் சிதைவை தடுக்க உதவும்

சருமத்தின் நீரேற்றத்தை அதிகரிக்கிறது

மூளை சிறப்பாக செயல்பட உதவும்

தைராய்டு பிரச்சனையைச் சரிசெய்யும்

உதடுகளைப் பாதுகாக்கவும், சீரானதாகவும் வைத்திருக்க உதவும்

ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும்